பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

169

67. செல்

மேகத்திற்குச் 'செல்' என்று ஒரு பெயரும் உண்டு. மேகம் மழை பொழியாமல் செல்வதைக் கண்டார் வேதநாயகம் பிள்ளை. அப்பொழுது 'செல்' என அதற்கொரு பெயருண்மையை எண்ணினார். அதனால், “செல் எனப் பெயரிட்டு உன்னை அழைத்ததை அல்லா மல் மழை பெய்யாமல் செல் என்று நாங்கள் கட்டளை ளை இட இட்டே ட்டோமோ? காரிருட்டு என்றே சொல்லு மாறு இருண்டு வந்த நீ பெய்யாமல் போனது ஏன்?” என வினவினார். அவர் தாமே, 'மாசு' எனப் பெயரிட்டவர்க்குப் பட்டம் வழங்கலாம் என்று பாராட்டியவர்! “செல்லென்றுன் நாமத்தைச் செப்பினதே அல்லாது

செல்லென் றுனைநாங்கள் செப்பினமா? - அல்லென்று மெய்யா உவமிக்க விண்மீது தோன்றியநீ பெய்யாமற் போனதென்னோ பேசு.’

நாமம் – பெயர். அல் - இரவு, இருள். மெய்யா – மெய்யாக. உவமிக்க

கூற.

உவமையாகக்