பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

74. அருமை

சிவஞான முனிவர் என்பவர் பெரும் புலமைச் செல்வர்; இளமையிலேயே துறவில் நாட்டம் கொண்டவர்; பன்னூலாசிரியர். அவர் இளம்பருவத்திலேயே துறவியரோடு பழகுவதையும், அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துவந்து விருந்து செய்வதையும் மேற்கொண்டிருந்தார்.

அவர் தந்தையார் ஆனந்தக் கூத்தர். அன்னையார் மயிலம்மையார். அவர்கள் தம்மைந்தர் விரும்பிய வண்ணம் நடந்து இன்புறுத்தினர். அதனால் தம் பெற்றோரை மனமுவந்து பாராட்டும் வகையால் பாடினார். பெற்றோர் பாராட்டும் பிள்ளையாகவும், பிள்ளை பாராட்டும் பெற்றோராகவும் வாய்த்த அருமைக் குடும்பம் ஆனந்தக் கூத்தர் குடும்பம் ஆகும். “அருந்ததிஎன் அம்மை அடியவர்கட் கென்றும் திருந்த அமுதளிக்கும் செல்வி - பொருந்தவே ஆனந்தக் கூத்தர் அகமகிழத் தொண்டுசெயும் மானந் தவாத மயில்.”

என்பது அப்பாடல்.

செல்வி - திருமகள் போன்றவன். மானம் தவாத - பெருமை நீங்காத. மயில்

பெயர்.