பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

179

77. 96160TIT?

சீர்காழி அருணாசலக் கவிராயர் பலப்பலரைத் தேடிச் சென்று பாடியும் பரிசில் வேண்டியும் வறுமை தீர்ந்த பாடில்லை. பரிசில் தாராரை நோவதா? பரிசில் தாராதவனை வேண்டி நின்ற தம்மை நோவதா? அவர்க்கு ஐயம் எழுந்தது.

என்னைப்பாடு; நான் தருகின்றேன் என்று எவனேனும் அழைத்தானா? நான் தானே தேடித் தேடிப் போய்ப் பாடிப் பரிசில் வேண்டி நின்றேன். தர வாய்த்த போது தராதவனை நொந்து ஆவதென்ன என்று தம்மைத் தாமே தேற்றிக் கொண்டார். தர வில்லை என்று திட்டாமல் தம் குற்றம் அது என உணர்வதும் உயர்ந்த பண்பு தானே.

“கால்வீழ்ந்து நம்மைக் கவிபாடச் சொன்னானோ? மேல்வீழ்ந்து நாமே விளம்பினோம்! - நூலறிந்து தந்தக்கால் தந்தான்; தராக்கால் நமதுமணம் நொந்தக்கால் என்னாகு மோ.”

விளம்பினோம் - கேட்டோம். கால் - காலம், பொழுது.