பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

78. முதலை

யானை ஒன்று ஒரு பொய்கைக்குள் புகுந்தது. அந்த யானையின் காலை முதலை ஒன்று பற்றியிழுத்து வெளியேற முடியாத நிலையில் அவ்யானையைத் திருமால் முதலையை அழித்துக் காத்தார் என்பது தொன்ம(புராண)க் கதை. “நெடுங் கடலுள் வெல்லும் முதலை" என்று முதலைக்கு நீருக்குள் இருக்கும் போதுள்ள வலிமையை வள்ளுவர் கூறினார்.

மதுர கவிகள் என்பார், உடையான் என்பவன் தமக்குச் செய்த தீமையை ஆறாயிரம் என்பான், தீர்த் ததை முதலை வாயில் இருந்து யானையைத் தப்புவித்த கதைபோல உருவகப்படுத்திக் கூறினார். அது:

66

"காக்கைக் குளமாம் கடிமலர்ப்பூம் பொய்கை

ஊர்க்கட் கராவாம் உடையானே - நீர்க்குந்த வாரணமே நல்ல மதுரகவி நேமிதொட்ட ஆரணனே ஆறா யிரம்.”

காக்கைக்குளம் - ஊர்ப்பெயர். கடி - மணம். கரா ஒருவன். வாரணம் யானை. நேமி – சக்கரம். தீமையை விலக் கியவன் பெயர்.

முதலை. உடையான் - துன்புறுத்திய ஆரணன் - திருமால். ஆறாயிரம் -