பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

183

81. கல்லாடம்

“கல்லாடம் கற்றாரிடம் சொல்லாடாதே” என்பதொரு பழமொழி. கல்லாடம் கல்லாடர் என்பாரால் செய்யப்பட்ட செறிவு மிக்க நூல். அதன் சொல்லாட்சி பொருளாட்சி ஆகியவையும் உவமை முதலிய நயங்களும் உள்ளம் கொள்ளை கொள்ள வல்லன.

அக் கல்லாடத்தைக் ‘கச்சிரங்க துரை' என்பார் நன்றாகக் கற்றறிந்திருந்தார். ஆதலால் அவரோடு தருக்கம் செய்து வெற்றிபெற எவருக்கும் முடியாது என்று பாலசரசுவதி சுப்பிரமணியக் கவிராயர் என்பவர் ஒரு பாடல் பாடினார்.

“கல்லாட மேமுதலாக் கற்றுணர்ந்தாய், கல்விபெற்றோர் பல்லாடக் கூடுமோ பார்வேந்தே - சொல்லாடும் கச்சிரங்க சாமியெனும் காலாட்கள் தோழாநீ வச்சிரதே கம்பெற்று வாழ்.”

என்பது அப்பாடல்

பல்லாடல் - எதிரிட்டுப்பேசல். கச்சிரங்கசாமி - காஞ்சிபுரத்து அரங்க சாமி. வச்சிரம் -

கெட்டிமிக்க. தேகம் - உடல்.