பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

86. கடையார்

திருநெல்வேலியை அடுத்துள்ளதாகிய மேலைப் பாளையத்தில் திரு. செ. சுப்பிரமணிய பிள்ளை என்பார் ஒருவர் ருந்தார். அவர் எளிய இனிய கவி பாடத் தேர்ந்தவர். நகரவைத் தேர்தலில் வேட்பாளராக நின்றார். தேர்தலுக்கு நிற்பவர் ‘வாக்காளரைத் தேடிச் சென்று வாக்குத் திரட்ட வேண் வேண்டிய கடமை உண்டல்லவா! அதனால் தமக்கு உண்டாகிய மனத் தளர்வை ஒரு பாட்டாக்கிப் பாடினார்.

இரும்புக் கடையை வன் பொருட்கடை என்பர்; அத்தகைய இரும்புக் கடைக்காரர்களும் மற்றை மற்றைக் கடைக்காரர்களும் ‘துரும்பிற் கடையர்' என்று தோன்றுமாறு செய்தது நகரவைத் தேர்தலுக்கு நின்று நகருக்குப் பாடுபடவேண்டும் என்று ஏற்பட்ட ஆவல். அதை நினைக்க நாணமாக உள்ளது என்று பாடினார்.

“இரும்புக் கடையாரும் ஏனையரும் இப்போ துரும்பிற் கடையராய்த் தோன்ற விரும்பா

விதியின் செயலென்று வெள்கினமே நெல்லைப் பதியின்மேல் வைத்த பரிவு.'

வெள்கினம்

-

நாணினோம். நெல்லைப்பதி – திருநெல்வேலி நகரம். பரிவு – அன்பு.

இப்போ - இப்பொழுது.