பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

90. முத்தலை

“பத்துக்கால், மூன்று தலை, ஆறு கண், ஆறு முகம், நான்கு வாய் இவற்றை ஓரிடத்துக் கண்டேன்; இதற்கு விடை கூறு’ என்று விடுகதை சொன்னார் ஒருவர்.

விடு கதையின் பொருள் யாது?

உழவன் “ஏரோட்டும் நிலை”யே விடுகதைப் பொருளாம். மூன்றுதலை; மூன்று தலையிலும் அமைந்த கண் ஆறு; இந்த மூன்று முகங்களுடன் கொழு முகம் ஒன்றும், நுகத்தடி முகம் இரண்டும் ஆக முகம் ஆறு. மனிதன் வாய், மாட்டின் வாய் இவற்றுடன் உழவு சாலின் வாய் ஒன்றும் சேர வாய் நான்கு.

இவ் விடுகதையை விடுகவியாகப் பாடியவர் சுந்தர கவிராயர் என்பவர்.

“பத்துக்கால்; மூன்றுதலை; பார்க்குங்கண் ஆறு;முகம் இத்தரையில் ஆறு;வாய் ஈரிரண்டாம்; - இத்தனையும் ஓரிடத்துக் கண்டேன் உகந்தேன் களிகூர்ந்தேன் பாரிடத்திற் கண்டே பகர்.

وو

ஈரிரண்டு - நான்கு. உகந்தேன் - விரும்பினேன். களி கூர்ந்தேன் - மகிழ்ந்தேன். பகர்

கூறு-