பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

4. பொதுமக்கள் பேச்சில்

பொய்யாமொழி

முகம்

வளமான வாழ்வியலில் காலம் காலமாகப் பழுத்துக் கனிந்தவை பழமொழிகள். அவ்வாறே வழிவழி மரபாக வந்து பேணப்பட்ட பெருஞ்செல்வம் மரபுத் தொடர்கள். இரண்டும் பழமையானவை மண்ணின் மணம் பரப்புவவை. அதனால், இவற்றை,

“வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர்”

66

(1336)

என்றார் தொல்காப்பியர். அவர் காலத்திற்கு முன்னரே பழமொழி, முதுமொழி எனப்பட்டமை, அதன் நெட்ட நெடும் பழமை உணர்த்தும். முதுமொழி யையும் ஒரு யாப்பியலாகவே கூறினார் என்பதை எண்ணுவதுடன், அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே” என்று அவர் கூறுவதும் எண்ணத்தகும் (1292). அடி என்பது இருசீர் கொண்ட குறளடியையும் குறிக்கும். அதனால் தான்,

66

66

"அறஞ்செய விரும்பு”

ஆறுவது சினம்”

என இருசீர்க் குறளடியால் ‘ஆத்தி சூடி’ மரபு நிலை மாறாது அமைந்தது. வள்ளுவர், பா வகையில் குறுகிய குறட்பாவால் நூலை இயற்றினார் எனவும், ஆத்தி சூடி குறளடியால் அமைந்தது எனவும் எண்ண வேண்டும்.

வள்ளுவர் கூறிய குறட்பாவினும் குறளடிப்பா குறுகியது என்பதை விளக்க வேண்டியது இல்லை. பா வகையில் குறுகியது