பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

அது, ‘கசவாளி' என்பதாம். ஈயாக் கயமையை ஆள்பவன். கயவாளி > கசவாளி ‘கயம்’ என்னும் ஆழமான நீர்நிலை, ‘கசம்’ என வழங்குவதும் ‘கயம்' என்னும் யானைப் பெயர், ‘கசம்’ என வழங்குவதும் எண்ணிப்பார்த்தால் ‘கசவாளி' என்பது கயவாளி' என்பதன் திரிபு வடிவம் என்பது புலப்படும். புலப்படவே 'கயவாளி' என்பது, “ஈர்ங்கை விதிரார் கயவர்’ என்னும் குறளடியின், 'தொகை' இம்மரபுத் தொடர் என்பது விளக்கமாகும்; இனிப்புமாகும்.