பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

ஓர் அறிஞர் உலகத்தின் ஒரு மூலையில் இருந்து கூறுகின்றார். அவர் கூற்று உலகவரை யெல்லாம் ஆட்படுத்துகின்றது. செயற்கரிய என்பன வெல்லாம் நடத்தற் கரியன என்பன வெல்லாம் நிகழ்ந்து விடுகின் றன. இச்சொல் அல்லது வாக்கு செல்வாக்குத் தானே! செலச் சொல்லல் தானே! “நா அசைய நாடு அசையும்" என்பது பழமொழி.