பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

209

10. செவிலி

பெற்றதாய் நற்றாய் எனப்படுவது அகப்பொருள் இலக்கண லக்கியச் செய்தி. பெற்றதாயை நல்லம்மா என்பதுபொது வழக்கு. தாயைப் போன்ற சிறிய தாயை நல்லம்மா என்பதும், தந்தை போன்ற சிற்றப்பாவை நல்லப்பா என்பதும் நடைமுறை.

வளர்க்கும் தாயைச் செவிலித்தாய் என்பது முன்னோர் முறைமை. அம் முறைமை வள்ளுவராலும் போற்றப்பட்டது. அன்பு என்னும் தாய் பெற்ற சேய் அருள் என்பது. அதனைப் பொருள் என்னும் செல்வச் செவிலி வளர்க்கிறாள் என்கிறார். பொருளைச் செல்வம் என்பதும் வழக்கே. அதனைச் ‘செல்வச் செவிலி' என்பது நயமான ஆட்சியாம்.

வளர்க்கும் தாய், வாய்ப்புத் தாயாகவும் இருக்க வேண்டும்; கல்வி, செல்வம்; கேள்வி, செல்வம்; பண்பு, செல்வம்; பொருளும் செல்வம்; உடல்நலமும் செல்வம்; மக்களும் செல்வம்; மனைவியும் செல்வம்; இச் செல்வங்களை ஒருங்குடையவள் 'செல்வச் செவிலி', இச் செவிலியின் சிறப்பியல் ‘செவிலிப் பயிற்சி’ என்னும் ஒரு பயிற்சியை இந் நாள் உண்டாக்கி உள்ளது அரசு.

மருத்துவமனையில் மருத்துவர்க்கு உதவியாகவும், நோயரைப் பேணுபவராகவும் இருப்பவர்க்குத் தரும் பயிற்சியே 'செவிலியர் பயிற்சி'யாகும். பணியும் செவிலியர் பணியே (Nursing Course, Nurse), வானூர்தியில் செவிலியராகப் பேணிநலம் செய்யும் தொழிலரும் உளர்.

பெற்றோர் பொறுப்பிலே இருந்து காப்பவரைக்‘காப்பாளர்’ என்பது இற்றை நடைமுறை, 'கார்டியன்' என்பது ஆங்கிலச் சொல். 'போசகர்' என வழங்கியது வட சொல். காவல் பெண்டு’ என்பார் அரண்மனை - அந்தப்புர வாழ்வுடைய கோப்பெண்டைக் அரண்மனை-அந்தப்புர காக்கும் கடமையுடையார். காவல் பெண்டின் பாட்டு

புறநானூற்றில் உண்டு.