பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

213

முள்மரம் பயன்படுமே எரிவிறகுக்கும் பலகை சட்டம் ஆகியவை எடுத்தற்கும் உதவுமே எனின் மஞ்சள் இஞ்சி வாழை கரும்பு நெல் என விளையும் விளைவைக் கெடுத்து விடுவதை எண்ண வேண்டும் அல்லவா! முள் மரம் முளையிலே களையப்படா விடின் விரைந்து மரமாவதுடன் நிலமெல்லாம் வித்தும் வேரும் பரப்பிக் கெடுத்து விடுதல் ஒரு தலை.

П

வேலிக் கருவேல், நெய்வேலி ஆமணக்கு என்பவை எப்படிப் பரவி விளை நிலங்களைப் பாழாக்குகின்றன என்பது கண்கூடு அல்லவா!

சில தீமைகளை முளையிலே கிள்ளா விட்டால்,முழுதழிவும் உண்டாகிவிடும் என்பது தெளிவாம்.