பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

239

ஆற்றா மாக்கள் அரும்பசி களை வோர்” எனப் பசியாற்றும் அறத்தை மணிமேகலை விரித்துக் கூறும். “பசித்தோர் முகம்பார்”

என்பார் வள்ளலார்.

66

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்” என்பார் வள்ளு வர். அப்பசியை ஆற்றுதல் உணவு தருதலால் மட்டுமா கூடும்? உணவைத் தாமே தேடிக் கொள்ளும் வகையால் பெற வழி காட்டினால், அவர்கள் கையேந்திப் பிழையாமல், தம் கை செய்து உண்ணும் வழக்கத்தைக் கொள்வார்களே! அப்படியாய் விட்டால் அவர்கள்,

66

இரவாரே! இரப்பார்க்கும் ஈவாரே என எண்ணிய வள்ளுவர், 'இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்”

என்கிறார். மேலும் இதனைத் தெளிவுறுத்தும் வகை யில், வகையில்,

66

'ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்'

என்கிறார். உணவு தருவதற்குப் பதிலாக, உணவு தேடிக் காள்ளத்தக்க வழியும் வகையும் செய்து தருக என்கிறார். ஆற்றமாட்டாதவனை உணவு தந்து என்றும் ஆற்றமாட்டாதவனாக வைத்திருத்தலை விடுத்து, அவனை ஆற்றமாட்டாதவர்க்கு ஆற்றுவானாக ஆக்கு என்கிறார். இவற்றால் ஆற்றமாட்டாதவன் என்னும் பொதுமக்கள் பழிப்புரை, பொய்யா மொழியார் வாக்கு விளக்கமாக இருத்தல் புலப்படும்.