பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

முடிவுரை

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பொய்யா மொழி, இன்றும் என்றும் பொய்யா மொழியே என்பதைப் பொதுமக்கள் பேச்சு வழக்கில் இருந்து எடுத்துக் கூறப்பட்டவை இவை. இவ்வளவே என்பது இல்லை. இன்னும் விரிவாகவும் அமர்வாகவும் எண்ணிப் பார்த்தால் பலப்பல குறள்களில் பொதுமக்கள் பேச்சில் வழங்கும் பொய்யாமொழிகள் புலப்படும்.

மக்கள் வழக்கிலுள்ள சொற்கள் தெளிவு, சுருக்கம் என்னும் இரண்டு கால்களாலும் நடக்கும், ஓடும் தாவும் என்பதை இங்குக் காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகள் கொண்டும் தெளிவு செய்யலாம்! அந் நோக்கில் ஆய்வு மேற்கொள்ளல் திருக்குறள் நடைமுறை வாழ்வு நூல் என்பதை மலைமேல் கதிரோன் எனக் காட்ட உதவும்!

ஒருமொழி உயிரோட்ட மொழி என்பதும், ஓர் அறம் உயிரோட்ட அறம் என்பதும் மக்கள் வழக்கால் மட்டுமே நிலைநாட்டப்படும். இல்லையேல் ல்லையேல் வாழும் மொழியாக இல்லாமல் வாழ்ந்த வரலாற்று மொழியாக - அகழ்வாய்வு மொழியாகவே தங்கி நிற்கும். மக்கள் வாழ்வில் தாங்கி நிற்கும் நம்மொழியின் வளத்தை நம் புலமையர் கண்டும் கொண்டும் பயன் கொள்ளல் அவர் தலைக்கடன் எனக் கூறல் இவ்வாய்வின் முடிவுரையாம்.

முற்றும்