பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். அக் கல்லூரியில் 1844 இல் சேர்ந்து 1852 ஆம் ஆண்டுவரை எட்டாண்டுகள் பயின்றார். சிறந்த தேர்ச்சி பெற்றார். பயிலும் காலத்திலேயே 'தமிழ்ப் புலவர்' என்னும் பட்டத்தைத் தம் ஆசிரியர்கள் பாராட்டு முகத்தால் தர, ஆங்கிலத்திலும் பிற துறைகளிலும் சிறந்து விளங்கினார். கோப்பாய் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியப் பணியை உடனே பெற்றார். அப்பொழுது தாமோதரர் அகவை இருபதே.

ஆசிரியர் :

ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் பணி செய்து கொண்டிருக்கும் போதில், அவரைப்பற்றிச் சிறப்பாகப் பலராலும் கேள்விப்பட்ட திருத்தந்தை பெர்சிவல் (Rev. P. Percival), விரும்பி அழைத்தவாறு, இந்திய நாட்டுக்கு வந்து 'தினவர்த்தமானி' என்னும் இதழாசிரியப் பொறுப்பு ஏற்றார்.

தினவர்த்தமானி :

பெர்சிவெலார் கிறித்தவத் திருமறையை ஆறுமுக நாவலரைக் கொண்டு மொழியாக்கத் திருத்தம் செய்து வெளியிட்டவர். தினவர்த்தமானி எனப்படும் கிழமை (வார) இதழின் ஆசிரியராக இருந்தவர். இவ்விதழ் வியாழக்கிழமை தோறும் வெளிவந்தது. நாட்டியல் செய்திகள், இலக்கியம், அறிவியல் ஆகியவை அதில் இடம் பெற்றன. இவர் அவ்விதழில் இருந்து ஓய்வு பெறும் போது, அவ்விடத்திற்கே நம் தாமோதரரை அமர்த்தினார். தாமோதரனார் எழுத்துத் திறம், பல வகைகளில் ஊற்றம் பெறுவதற்கு ஊற்றுக் கண்ணாக இருந்தது இவ்விதழ்ப் பணியாகும்.

இதழாசிரியர் :

இதழாசிரியராகத் தாமோதரர் இருந்துகொண்டே கற்பிக்கும் ஆசிரியராகவும் விளங்கினார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிப் புலமை வாய்ந்திருந்த தாமோதரர், ஆங்கிலப் பெருமக்கள் சிலர்க்குத் தமிழ் கற்பித்தார். அவ்வாறு இவரிடம் பயின்றோருள் பேராசிரியர் பர்னல், சர் வால்டர் எலியட், லூசிங்டன் என்பவர் குறிப்பிடத்தக்கவர்.

பேராசிரியர் :

ஆங்கிலப் பெருமக்களுக்குத் தமிழ்கற்பித்துச் சிறந்த செய்தி அரசுக்கு எட்டியது. எட்டவே, சென்னை, மாநிலக் கல்லூரித்