பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

செய்திருப்பின் பெரும் பயனாக இருந்திருக்கும் என்றும் குறிப்பர் (தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம். பக். 100-102)

யாழ்ப்பாணத்து ஏழாலை சைவப்பிரகாச வித்தியா சாலையை நிறுவியவர் தாமோதரர் என்பதும் (19ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம்; மயிலை சீனி. வேங்கடசாமி பக்.243), ஆந்திரம் வடமொழி ஆங்கிலம் தமிழ் ஆகிய நான்கு மொழிப் புலமையும், வாய்ந்தவர் தாமோதரர் என்பதும் (நா. கதிரைவேலர் இரங்கல்) பூண்டி அரங்கநாதர் இயற்றிய கச்சிக்கலம்பகம் பற்றிச் சென்னைக் கிறித்தவக் கல்லூரிச் செய்தி இதழில் சில 'வழுக்கள் செறிந்த கலம்பகம்' என்றொரு கட்டுரை வந்ததாக அதற்குத் தாமோதரர் ஆங்கிலத்தில் A defence for the modern Kalambakam என்றொரு கட்டுரை எழுதி அக்கலம்பகப் பெருமையை நிலைப்படுத்தினர் என்பதும் அறியவரும் பிற செய்திகள்.