பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

இது தொடர்பாகத் தாமோதரர் எழுத்து வழியே ஒன்றும் அறிந்து கொள்ளக் கூடவில்லை. சிந்தாமணி பதிப்பிக்க முயன்ற முயற்சியும், சிந்தாமணி ஏடுதொகுத்ததும் ஆகிய தாமோதரர் செயல்களையும் பழந்தமிழ் நூல் பரப்பை உ.வே. சாமிநாதர்க்கு உணர்த்திய சேலம் இராமசாமியாரும், தாமோதரரின் சிந்தாமணிப் பதிப்புக்குச் சாமிநாதரிடம் பரிந்துரைத்தார் என்பதையும் என் சரிதத்தில் குறிப்பிடுகிறார் சாமிநாதர்.

மேலும், சிந்தாமணி முதற்பதிப்புக்கே சி.வை. தாமோதரனார் ஏட்டுப் படிகள் இரண்டு உதவியதை முதற்பதிப்பின் முகவுரையிலே குறிப்பிட்டுள்ளார் சாமிநாதர் (அக்.1887).

"இந்நூலையும் இவ்வுரையையும் பின்னும் இரண்டொரு முறை பரிசோதித்தற்கு விருப்புடையனேனும், இவற்றை விரைவிற் பதிப்பித்துப் பிரகடனம் செய்யும்படி யாழ்ப்பாணம் ம.ள.ள.ஸ்ரீ.சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்" என அம்முதற்பதிப்பின் முகவுரையிலேயே சாமிநாதர் வரைந்துள்ளார். எண்ணிப்பார்க்கத்தக்க செய்திகள் இவை என்பதாலும், பதிப்புத் துறை வரலாற்றுக்குரிய சான்றுகள் இவை ஆகலானும் அப்படியே

தரப்பட்டுள்ளன.

“தொல்காப் பியமுதலாந் தொன்னூல் களைப்பதிப்பித் தொல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின்-அல்காத தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்ட துன்பை யாமோ தரமியம்ப வே

இது தாமோதரர் இயற்கை எய்திய போது சாமிநாதர் பாடிய இரங்கற்பா.