பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

135

வடமொழியுணர்ச்சி ஓர் உணர்ச்சி யன்றென்று யான் கருதியமை பற்றியே எனக் கொள்க. தமிழிலே தானும் யான் என்னை ஒரு பொருளாக மதியாமை தொல்காப்பியப் பதிப்புரையில் பண்டிதர், கவிராசர், வித்துவான், புலவன் என்று இன்னோரன்ன பட்டத்திற்கு அருகனாகாது இன்னும் பல காலந் தமிழ்ப் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என்போலியர் என்பதனான் விளங்கும். நமது தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும், கையெழுத்துப் பிரதிகளின் கதியையும், அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்கமாட்டாமை யொன்றே என்னை இத்தொழிலில் வலிப்பது" என்று கலித்தொகைப் பதிப்புரையில் எழுதினார்.

குறைகூறுவார்க்கு

குறைகூற விருப்பமுடையார் பழநூல் பதிப்பில் இறங்கிப் பணிசெய்து காட்டுக என்று கலித்தொகை பதிப்பிலே அறைகூவல் விட்ட தாமோதரர் தொல். பொருள் பதிப்பிலே,

"குறைகூற இஷ்டமுள்ளவர்கள் இன்னும் அச்சிலே தோற்றாதனவாய், அடியேன் காட்டும் கிரந்தங்களில் இரண்டொரு ஏட்டையாயினும் எழுத்துப் பிழையற மாத்திரம் வாசித்துக் காட்டுவாராயின் அவர்கள் பாதாம் புயத்தை உச்சிமேற் சூடி அவர்கட்குத் தொண்டு பூண்டு ஒழுகுவென் என்று அறிவாராக. ஏடு கையிற் பிடித்தவுடன் அதன் எழுத்து. தேகவியோகமான தந்தை கையெழுத்துப் போல் தோன்றிற் றென்று கண்ணீர் பெருக அழுத கதையும் உண்டன்றோ!" என்று எள்ளி நகைக்கிறார். "இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்தூர்வ தஃதொப்பதில்" என்று தெளிந்த தெளிவு இது.

என்னெனில் குறை கூறுவாருள் பலர் பொறாமை வழிப்பட்டவர் என்பதைத் தெள்ளென உள்ளகங் கொண்டு 'மறுப்புரைத்தலும் வேண்டா என விடுத்ததும், அவர் கடைப்பிடியே, மறுப்புகள் எப்படி?

சேனாவரையைப் பதிப்புப் பற்றிய விளம்பரத்தில், "இலக்கண இலக்கியங்களில் மகா வல்லவரும் சென்னை முதல் ஈழம் ஈறாகவுள்ள தமிழ் நாட்டு வித்துவான்களில் தமக்கு இணை யில்லாதவருமாகிய நாவலர் என்று தாமோதரனார் வரைந்தி ருந்தார். இதில் என்ன குற்றம்? குற்றமாக ஒருவருக்குப்பட்டது! அதற்கு 1869 ஆம் ஆண்டு பெப்ரவரித் திங்களில் 'விஞ்ஞானபனப் பத்திரிகை' என்று ஒருவசை இதழ் வெளியிட்டார்! "இணை யில்லாதவர் என்பதற்குப் பெண் சாதியில்லாதவர்” என்று