பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சீடு:

தமிழ் வளர்த்த தாமோதரனார்

139

ஒரு நூல் அச்சில் வாராமை அதன் பயிற்சி இன்மைக்கும், அச்சில் வருதல் பயிற்சி உண்மைக்கும் காரணமாதலை எதுகை மோனை உவமைக் கதை நயத்தொடும் குறிக்கிறார் தாமோதரர்;

66

சூறாவளி மாறாய் மோதி என்?

சூத்திர விருத்தி வான் ஆர்த்து இடித்தென்?

கன்ன துரோண சயித்திரதர் என்ன துரோகம் இயை த்திடினும் தேரொன்று கிடையாத குறையன்றோ களத்தவிந்தான் சிறுவன்!

அச்சுவாகனம் கிடையாத குறையன்றோ லக்கண விளக்கம் மடங்கியது!”

இது கலித்தொகைப் பதிப்புரை, இதனையே 'இலக்கண விளக்கப்பதிப்புரையிலும் சுட்டுகிறார்.

விளக்கம்

நன்னூல் பரவிய அளவுக்கு இலக்கண பரவாமையை எண்ணி எழுதுவது இது. இலக்கண விளக்கச் சூறாவளி தொல்காப்பிய சூத்திர விருத்தி என்பன இலக்கண விளக்கம் குறித்துச் சிவஞான முனிவரால் எழுதப்பட்ட கண்டன் நூல்கள். சிறுவன் என்பான் அபிமன்யு. அவனுக்குத் தேர் இருந்திருப்பின் சூழ்ச்சியை வென்றிருப்பான். இலக்கண விளக்கம் அச்சூர்தி ஏறியிருப்பின் எதிர்ப்பை வென்றிருக்கும்! மேலே ஆய்வில் இப்பகுதியை விரியக் காணலாம்.

'பிறர் பதிப்பித்த நூலைத் தாம் பதிப்பிப்பதில்லை' என்னும் கொள்கையுடையவர் தாமோதரர். அதற்கு ஒரு மருங்கு தவிர்த்துச் செல்லும் நிலையும் அவர்க்கு உண்டாகியது.

எழுத்திற்கு இளம்பூரணமும் சொல்லிற்குச் சேனா வரையமும் சிறந்த உரை எனத் தாம் கண்டாலும், அவற்றுக்குப் பின்னாக எழுந்ததும் மூன்றதிகாரத்திற்கும் உரையுடையதும் பிறர் மதங்களை ஆங்காங்குக் கண்டித்து வரைவதுமாம் நச்சினார்க் கினியத்தைப் பதிப்பிக்கத் தாமோதரர் எண்ணினார்.

பொருளதிகாரத்திற்கு எவருரையும் அச்சாகாமலும் எழுதுவாரும் படிப்பாரும் இல்லாமலும் இருந்த நச்சினார்க் கினியர் உரையை முதற்கண் வெளியிடுவது நலமென்று வெளியிட்டார். பின்னர்ச் சொல்லதிகாரத்தை வெளியிடத் துணிந்தார். அதன் படிகளைத் தொகுத்துப் பதிப்பிக்க ஒழுங்கு