பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

147

தெரிகிலேன். இம்மூவரும் இளம் வயதிலே சிவபதமடைய என் நம்பிக்கை நிறைவேறாமல் போய் விட்டது" என்று இரங்குகிறார் (கலி.பதிப்).

பதிப்புத்துணை புரிந்தாரை அவ்வந்நூல்களில் தவறாமல் பாராட்டுகிறார் தாமோதரர். அவர்களுள் ந.க. சதாசிவம், யாழ்ப்பாணம் சிந்தாமணி உபாத்தியாயர் வேலு, நல்லூர் சிற் கைலாசர் திருகோண மலை ந.க. கனகசுந்தரம் ஆகியோர் குறிப்பிடத் தக்கோர்.

வடமொழி தொடர்பான செய்திகளை வேதாரணிய ஆதீனம் கைலாயநாத சந்நிதி, சென்னை பச்சையப்பர் பாடசாலை வடமொழியாசிரியர் மண்டைக்குளத்தூர் கிருட்டிணர், யாழ்ப்பாணம் நீர்வேலி சிவப்பிரகாச பண்டிதர் என்பார் (வீரசோழியம்) உதவியுளர்.

சமணசமயம் தொடர்பான செய்திகளை, அச்சமயச் சான்றோர்கள் வழியே தெளிவு செய்து பயன்படுத்தியுள்ளார். அவர்கள், வீடூர் அப்பாசாமியார், மன்னார்குடி மு. அ. அப்பாண்டார், காஞ்சிபுரம் பச்சையப்பன் பாடசாலைத் தமிழாசிரியர் வ.கணபதி என்பார் (சூளாமணி).

ஆசிரியர்:

கலித்தொகைப் பதிப்புரையில் "என் சிறு பிராயத்தில் என் தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ் நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்களும் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைத் தொட்டுப்பார்த்தால் அன்றோ தெரியவரும்" என்று இளமையை நினைவு கூர்ந்து எழுதுகின்றார். ஒவ்வொரு நூல் பதிப்புரையிலும் தமக்குக் கற்பித்த ஆசிரியர் சன்னாகம் முத்துக்குமரக் கவிராயரைச் சிறப்பப் பாடுகிறார்; பரவுகிறார்.

“எழுத்தொடு விழுத்தமிழ் பழுத்த செந் நாவினன் முழுத்தகை யேற்கவை யழுத்தியோன் சுன்னா கத்துயர் மரபினோன் முத்துக் குமார

வித்தகன் அடிதலை வைத்து வாழ்த்துவனே”

என்பது வீரசோழியப் பதிப்பில் உள்ள தமிழாசிரிய வணக்கம்.

திங்கள் ஆம்பலும் செங்கதிர்ச் செல்வன் கொங்கவிழ் நறையிதழ்ப் பங்கய மலரும்