பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

திராவிடம் எனவே இவ்வைந்து மொழிகளும் வழங்கும் நிலத்தின் பெயரென்பது தானே போதரும். அன்றியும் ஈராயிரம் ஆண்டுச் சொல்லையா பதினாறாயிரம் ஆண்டு மொழிக்கு இட்ட பெயரென்பது? இவற்றால் தமிழ் திராவிடம் ஆயதூஉம், திராவிடம் தமிழாயதூஉம் இரண்டும் தவறே என்று முடிவுகட்டுகிறார்.

மேலும் கீழ்வாய்க் கணக்கு, விரவியல் செய்யுள், மணிப் பிரவாளம் என்பவற்றுக்கு முன்னோர் வேற்றுமை வகுத்த லக்கணமே தமிழ் தனிமொழி என்பதற்குச் சான்றாகுமே என்கிறார்.இக்காலத்தில் ஆங்கிலம் பிரெஞ்சு மொழி கலந்த தமிழ்ச் செய்யுளுக்கு உள்ள குறை, அக்காலத்தில் வடமொழிக் கலப்புக்கு இருந்த தெனின் அது தமிழுக்குத் தாய்மொழி எனப்படுவது எவ்வாறு? என்கிறார்.

சங்க நூல்களிலும் சங்கஞ்சார் நூல்களிலும் வடமொழிக் கலப்பு எத்துணைச் சிறுபான்மை? என வினவிப் பலசான்றுகள் காட்டுகிறார். கல்வியறிவில்லார் மட்டுமன்றிக் கற்றாரும் மயங்கு வதை எடுத்துக் காட்டுகிறார்.

தமிழ் என்னும் சொல்லையும் திராவிடம் என்னும் சொல்லையும் அவற்றின் பழமை புதுமை நோக்காமல் ஒன்று என்பாரைப் பார்த்து நகைத்து, "பாட்டன் திருமணத்தில் பேரன் சந்தன தாம்பூலம் பரிமாறினான் என்பதற்கும் இதற்கும் யாது பேதம்" என்கிறார்.

ஆ. கீழ்கணக்கு

பதிணெண் கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பதைக் காட்டுவதொரு வெண்பா அது.

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு

என்பது. இப்பதினெட்டு நூல்களும் இவை இவை என்பதில் அறிஞர்களிடையே சிக்கல் இருந்த காலம் அது. அதனால்,

கலித்தொகைப் பதிப்புரையிலே தாமோதரர் எழுதுகிறார்:

"கோவை என்றது ஆசாரக் கோவையை; முப்பால் என்றது திரிகடுகம் ஆசாரக்கோவை பழமொழி பஞ்சமூலம் ஆகியன போன்று நாலடிவெண்பாவான் இயன்று அக்காலத்திலே வழங்கிய