பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

165

கருவி நூல்கள் இல்லாமையாலும், கருவிநூல்கள் இருப்பினும் அச்சூர்தி ஏறாமையாலும், ஆய்வாளர் உள்ளகப்பகை, பொறாமை முதலியவற்றாலும் தாமோதரர் தம் ஆய்வுகள் முழுமையும் திருத்தமும் பெறாவாய் அமையினும், அக்காலச் சூழலை நோக்க அவர்தம் ஆர்வப் பெருக்கம் உழைப்பின் அருமையும் நன்கு வெளிப்படுதல் தெளிவாம். அவர் தலைப்பட்டுச் செய்த பழந்தமிழ்ப் பதிப்புத் துறையே பின்னவர்க்குத் தூண்டலாய் அமைந்து துலங்குவித்தன என்பதை எண்ணின் தாமோதரர் தமிழ் வளர்த்தவர் மட்டுமல்லாமல், தமிழ் காத்த தாதாவும் ஆவர் என்பது விளக்கமாம்!

தமிழ்த் தொண்டர் தாமோதரர் புகழ் வாழ்வதாக!

முற்றிற்று.

a b