பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

59

த ண்ணீர்க் குழாய்கள் மின்சாரவிளக்குகள் ஆகிய வற்றின் வருணனைகளும் நன்கு அமைந்துள்ளன. அம்பிகை மீது இத்தகைய சந்தப்பா நூலொன்று இதுகாறும் யாமறிந்ததிலம் ஆதலின் எமது பரம மாதாவுக்கு வாய்த்ததோர் நவமணி யணியாகவே கொண்டு தமிழ் மக்கள் மகிழ்வார்என்பது எமது துணிவு” என்று சண்முகனார் உழுவலன்பர் மு.ரா.கந்தசாமிக் கவிராயர் எழுதியுள்ள உரை இந்நூற் சால்பினை தெரிவிப்பதாகும்.

எழுபது நாள்கள் பாலுணவு அன்றி வேறுணவு கொள்ளாத நோன்பு கொண்டிருந்து பாடப்பெற்ற நூல் இச்சந்தத் திருவடி மாலை எனின் இதன் பத்திச் சுவையினைக் கூற வேண்டுவதின்று.

இந்நூலினகத்து 'ஒற்றை வழியோடுகின்ற இரட்டையுருள்" என்று சைக்கிளையும் (Bicyele), "அப்பின் ஆவியின் வேகமுற்ற உருள்" என்று நீராவியால் ஓடுகின்ற வண்டிகளையும் (Steam Lo- comotives), 'மின்சாரமுற்ற வுருள்' என்று மின்சார வண்டிகளையும் (Electric Tram ways), 'ஒலிகால்வ என்று முன்வாங்கிய ஒலியை ஆதியில்போல மீளமீளக் காலுகின்ற யந்திரத்தையும் (Gramma Phone) 'நெய்த்திரிளாதியற்ற வொளி' என்று மின்விளக்கு களையும் (Electric light), 'இருப்பின் இயல்வார் குழல்' என்று இரும்பால் செய்த நீண்ட குழாய்களையும் சுட்டுகின்றார்.

இம் மாலை நூலின் 19ஆம் பாடலிலே,

"இருபாத கமலமு நாடுவன், இனிவாதை செயுநம னோடுவன்"

என்று பாடி, கைப் பிரதியிலும் அவ்வாறே குறித்துக் கொண்டார். ஆனால் அச்சிடுங்காலையில் இச் சொற்றொடரில் அமைந்து கிடந்த தவறொன்று சண்முகனார்க்குப் புலனாயிற்று. 'இனிவாதை செயு நமன்' என்பது பின்வரும் மரணத் துயருக்கு அமைந்த முன்னறிவிப்பாக அமைந்து விடுகின்றது அன்றோ! சண்முகனார் சொல்லை மாற்றினார், இனிவாதை இலை; நமன் ஓடுவன்; என்று ஆனால்நமன் ஓடினானா? நம்மவன் என்று உரிமை கொண்டாடி விட்டான். சந்தத் திருவடி மாலை வெளிவந்த 1915 ஆம் ஆண்டில் தானே சண்முகனாரும் இயற்கை எய்தினார்.

8. மாலை மாற்று மாலை

குமரக் கடவுள்மீது தொகுக்கப்பட்ட மாலையாகும் இது. சண்முகனாரால், 1887 ஆம் ஆண்டில் இயற்றப்பெற்றது. சொல் சொல்லாக ஈறுமுதல் வாசிப்பினும் மாலை மாற்று மாலை என்றே