பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ் வளம் 228

கோடியில் வழங்கும் தமிழை இயற்கைமொழி என்பதும் இந்தியா முழுதும் வழங்கிய மொழி என்பதும் பொருந்தாது என ஒருவர் மறுத்தார்.

அடிகள், இந்தியா மட்டுமன்று உலகமெங்கும் தமிழே முன்பு வழங்கியது எனச் சான்றுகளுடன் விளக்கினார்.

அடிகளார் சைவத்தின் மேல்நிலையைப் பெறவேண்டும் என்று சூரியனார் கோயில் மடத்தில் கூறினார்; மதுரைநாயகம், "தாயார்க்கு உதவியாய் இருப்பது முதன்மை எனக் கூறித் தடுத்தார்.

அடிகளாரை அலுவலக எழுத்தராக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மதுரை நாயகர்; அடிகள் ஆசிரியப் பணி செய்யவே ஆர்வம்" என்று மறுத்து விட்டார்.

ஆய்வுத்திறம்

'சிலப்பதிகாரத்தில் சித்திரப் சித்திரப் படத்துள்' என்னும் கானல்வரியில் யாழ்கையில் தொழுது வாங்கி எனவரும் பகுதியைக் கேட்ட அடிகளார், 'யாழ்கையில் தொழுது வாங்கியவர் யார்? கொடுத்தவர் யார்?' என வினவினார். வாங்கியவர் மாதவி, கொடுத்தவள் வயந்த மாலை என்றேன். வயந்த மாலை ஏவற் பணிப்பெண்ணாகிய சேடியே அன்றோ! அவளை மாதவி ஏற்றுக்குத் தொழுதல் வேண்டும்? என வினவினார். வினாவை எதிர்பாராத யான் சிறிது தயங்கினேன். உடனே அடிகளார், மாதவி தொழுதது வயந்த மாலை அன்று; யாழ்க் கருவியையே மாதவி தொழுதாள். இசைத் தெய்வம் அதன்கண் தங்கி உயர்வதாகக் கலையுணர்வு மிக்க மாதவி கருதினாள்" என்றார் அடிகள்.

66

ஒரு சொல்லின் மூலம் அல்லது வேர் தமிழெனக் கொள்ள இயலுமாயின் அது பிறமொழிச் சொற்போல ஐயுறக் கிடப்பினும் அதனைத் தமிழ்ச் சொல் என்றே கொள்ளுதல் கூடும். 'துரை' என்னும் சொல் 'துர' என்னும் மூலம் அல்லது வேரினின்று செலுத்து ஏவு என்னும் பொருள் உடையதால் ஏனையோரைச் செலுத்துபவன் ஏவுபவன் என்னும் குறிப்பில் ஒரு தலைவனைக் குறிப்பதாயிற்று. இவ்வாற்றால் அதனைத் தமிழ்ச் சொல் என்றே கோடல் பொருந்தும் என்றார் அடிகள்.

-

-

ந.ரா. முருகவேள்.