பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ் வளம் - 22 228

"அருந்தே மாந்த” என்பதில், “பெயரெச்சத்துக்கு ஈற்றகரம் தாக்கது” என்றும் "காண்கு வந்திசின்" என்பதில் ",சின் தன்மை இடத்தில் வந்தது எனவும் வெலீஇயோன்" என்பதில் அளபெடை பிறவினைப் பொருள் தர வந்தது எனவும் 'உரைத்திசின்" என்பதில் "இசின் முன்னிலைக்கண் வந்தது' எனவும் வரைகின்றார். மேலும் உரையில் இலக்கணக் குறிப்புள்ள இடங்களில் தக்க எடுத்துக்காட்டுக் காட்டுவதும் அடிகளுக்கு இயல்பாகும்.

66

‘னகர வீற்றுச் சொல் வேற்றுமைக்கண் அம்முப் பெற்று நிற்கும்' என்றும் குறிப்பிற்குக் “கான்” என்பதை எடுத்துக் காட்டுகிறார். "கானம்" என ஆகுமன்றோ.

சொல்லாய்வு:

சொல்லாராய்ச்சியில்

தலை நின்றவர் அடிகளார். தங்கத்தின் மாற்றை உராய்ந்து காண்பார் போலச் சொல்லையும் சொல்மூலத்தையும் ஆய்ந்து கண்ட ஆசிரியர் அடிகளார். தாம் ஆயும் நூல்களில் வரும் தமிழ்ச் சொல், வடசொல், திசைச் சொல் ஆகியவற்றை எண்ணிக் கணக்குப் போட்டுக் காட்டியவர் அவர். ஆதலால் அவர் பயின்ற நூல்களின் சொல்லாய்வுக் குறிப்புகள் மிகப் பலவாம்.

உள்ள

இது தமிழ்ச் சொல், இது வடசொல் எனக் காட்டுவதை அன்றி, ஆங்கிலச் சொல் முதலியவற்றுக்குத் தக்க தமிழ்ச் சொல் உண்டாயின் அவற்றையும் சுட்டுகிறார்.

"உருள்' என்னும் சொல்லை 'Wheel' என்பதற்கு ஏற்றதாகக் குறிக்கிறார். "வானவூர்தி" என்னும் சொல்லுக்கு "Aeroplane" என்று குறிக்கிறார்.

-

சொல்வகை காட்டுவதுடன் அரிய சொற்களுக்குப் பொருளும் எழுதுகிறார். உரை இ உலவி; சுரை உட்டுளை; வளைய; தொன்றி தெற்கு இன்னவை பல.

வங்க

-

-

சொற்றொடர் விளக்கமும் ஆங்காங்குக் குறிப்பிடுகிறார் :

"வழி முடக்கு மாவின் பாய்ச்சல்"

கோமுத்திரி" என விளக்கம் காட்டுகிறார்.

என்பதற்குக்

"நரந்தை நறும்புல்' என்னும் தொடர்க்கு 'நறுமணம்

வாய்ந்த புல்லும் நரந்தை எனப் பெயர் பெறும்" என விளக்கம் தருகிறார்.