பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ் வளம் 22

காளிதாசர் தழுவிய உலகப் படைப்பு முறை பண்டை இருக்கு வேத வழித்தாதல் காண்க.

வேத

காலத்திற்குப்

பிற்பட்டதான தைத்திரிய உபநிடதத்தில்விசும்பில் இருந்து காற்றும், காற்றில் இருந்து தீயும், தீயில் இருந்து நீரும், நீரில் இருந்து நிலனும் உண்டாயின என்று நுவலப்படுங் கருத்து அவர்க்கு உடன்பாடன்று என்கிறார்.

அட்ட மூர்த்தம் என்னும் எட்டு வடிவாய் விளங்கும் சிவபெருமானையே வணங்கு முகத்தால் வாழ்த்துரை கூறினார் என்னும் அடிகளார் அதனை நிலைநிறுத்தப் பல சான்றுகளை எடுத்துரைக்கிறார்.

வேதங்கள் தொகுக்கப்பட்டுப் பிராமணங்களும் பழைய பன்னிரண்டு உபநிடதங்களும் வரையப்பட்ட பண்டைக் காலத்தேசிவபெருமான் ஒருவனே முழு முதற் கடவுளாக வணங்கப் பட்டனன். இவ்வுண்மை மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்னும் எமது நூலில் கண்டு கொள்க. காளிதாசர் பிற்காலத்தெழுந்த புராண முறையைத் தழுவாது முற்காலத்ததாகிய வேதமுறையைத் தழுவுதலிற் சிவபெருமான் ஒருவனையே முழுமுதற் கடவுளாக வைத்து வாழ்த்துரை கூறுவாராயினர். இங்ஙனமே இவர்தாம் இயற்றிய விக்கிரமோர் வசியம் என்னும் நாடகத்தின் முகத்தும், "மாளவிகாக நிமித்திரம் என்னும் நாடகத்தின் முகத்தும், சிவபெருமான் ஒருவனையே முழுமுதற் கடவுளாக வைத்து வாழ்த்துரைத்தல் காண்க" என்கிறார்.

66

29

சகுந்தலை, மல்லிகைக்கு நீர் சொரியும்போது ஆங்கிருந்த கருவண்டு அவள் முகத்தண்டை பறந்தது. அதுகண்டு பதறி, தோழியர்களை நோக்கிக் காக்க ஏவ, அவர்கள், தவத்தோர் கானகம் காப்பவர்காவலரே ஆகலின் "துசியந்தனைக் கூப்பிடு" என்று நகைக்க, தனித்திருக்கும் மகளிர்பால் செல்லுதற்குத் தக்க சூழலை நோக்கிக் காத்திருந்த "துசியந்தன்" ஒரு வேட்டுவன் என்ன உடனே தோன்றி உதவுகின்றான்.

ளைய

?

இதனை விளக்கும் அடிகளார், மரச் செறிவில் மறைந்து நிற்கும் அரசன் தனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத இன மகளிர் பால் செல்லுதல் உயர்ந்தோர் ஒழுக்க மாகாமையின், தான் அவர்கள்பாற் செல்லுதற்கு ஏற்றதொரு நேரத்தை எதிர்பார்த்து நிற்க ஒரு வண்டானது, அவர்களைத் துன்புறுத்தி அவர்களே ஓர் ஆண் மகனுதவியை அவாவிக் கூவுமாறு செய்து,