பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

131

அவன் அவர்களைச் சென்றணுகுதற்கு ஒரு காரணங் கற்பித்தவாறு காண்க. இங்ஙனம் தலைமகன் தலைமகளைச் சென்று சேர்தலை "வண்டோச்சி மருங்கணைதல்" என்று தமிழ் நூலார் கூறுப, (162) என்றும், துசியந்த மன்னன் வரலாறுகளைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அனசூயை கேட்ட வினாக்களுக்கு அவ்வரசன் உண்மையைத் தெரிவியாமல் தன்னை மறைத்து மொழியும் நுட்பம் உற்று நோக்கற்பாலது. ஒருவனுடைய வரலாறுகள் தெரியாமலே அவனைக் கண்ட அளவில் அவன்மேல் ஆராக் காதல் கொள்ளும் ஒரு மங்கையே அவன் மேல் என்றும் நெகிழாத கற்பொழுக்கத்திற் சிறந்து திகழ்வள்.

ஒருவன் தன் செல்வத்தையும்

அன்புடையளாய்க்

அதிகாரத்தையும்

(தலைமையையும்) புகழையும் குடியுயர்வையும் பாராட்டி அவன்மேல் அன்பு கொள்ளும் ஒருமாது அவன்பால்பிறழாத காதலன்புடையளாய் ஒழுகுதல் அரிது. அது பற்றியே அரசன் தனக்குள்ள புறச் சிறப்புக்களைத் தெரிவியாது தன்மேற் சகுந்தலையின் மனப்பதிவு எத்தன்மையதாக நிகழ்கின்றதென் ஆராய்ந்து ஓர்கின்றான் என்றாலும் தன் குடிக்கு முதல்வனான புருவின் பெயரால் தன் உணமையையும் ஒருவாற்றாற் குறிக்கின்றான்" என்கிறார் (163)

""

இரண்டாம் வகுப்பில், "யவனப்' பணிப் பெண்கள் வரவு கூறப்படுகின்றது. அதனைக் குறிக்கும் அடிகளார், "யவனம்' என்பது கிரேக்க நாட்டின் ஒரு பகுதி. "ஐயோனியா" என்னும் கிரேக்க மொழிச் சொல் யவனம் எனத் திரிந்தது. இந்திய நாட்டு மன்னர்கள் தம்முடைய அம்புக் கூட்டையும் வில்லையும் பாதுகாத்து வைத்துக் கொடுக்கும் தொழிலில் இவ்வயல்நாட்டு மாதர்களை அமைப்பது பழைய வழக்கம் என்பது இதனால் புலனாகின்றது. இவ் யவனர் தமது நாட்டில் இருந்து "தேறல்" என்ப பெயரிய இனிய பருகு நீரைக் கொணர்ந்து தமிழ்நாட்டில் அஞ்ஞான்று விலை செய்தமை "யவனர்" நன்கலந்தந்த தண்கமழ் தேறல் (புறநானூறு 56) என்னும் நக்கீரனார் செய்யுளாலும் அறியக் கிடக்கின்றது என்கிறார்.(169)

கரடிகள் மக்களின் மூக்கிறைச்சியைத் தின்பதில் மிக்க விருப்பம் உடையன என்பது தசகுமார சரிதத்திலும் கூறப்பட்டது என்று சுட்டுகிறார் (171)

து