பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ் வளம் 22

பற்றி எடுத்துரைக்கிறார். பாகன் வயப்படாது கடிவாளத்தை அறுத்துக் கொண்டோடும் குதிரையை அப்பொழுதே பிடித்து நிறுத்தி இடர்ப்படாமல், அதன் போக்கிலே ஓடவிட்டு அயர்வுற்ற நிலையில் எளிதாகப் பாகன் அதனை வயப்படுத்துவது போலப் புறப் பொருளில் விரியச் சென்ற அறிவை அகமுகப்படுத்தி ஒடுக்கி அகப்பொருளில், “வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய, வாரேன் வாழிய நெஞ்சே” என ரண்டடியான் மாத்திரம் மிகச் சுருக்கிக் கூறிய ஆசிரியர் நுட்பத்தைப் பாராட்டுகிறார்.

301 அடியுடைய இப்பாட்டில் 297 அடிகளில் புறப்பொருளும் 4 அடிகளில் மட்டுமே அகப்பொருட் சுருக்கமும் உள்ளமையை நயக்கிறார் (16,17)

சுவை

பால் கறந்த மாத்திரையே உண்பார்க்குச் பயக்குமாயினும் அதனை வற்றக் காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப் பின்னுண்பார்க்குக் கழிபெருஞ்சுவை தருதல் போலவும்,

முற்றின கருப்பங்கழியை நறுக்கிப் பிழிந்த மாத்திரையே

அஃது இனிமை

அதன் சாற்றைப் பருகுவார்க்கு விளைக்குமாயினும், மேலும் அதனைப் பாகு திரளக் காய்ச்சிச் சருக்கரைக் கட்டியாக எடுத்துண்பார்க்கு ஆற்றவும் பேரினிமை பயத்தல் போலவும்,

உரையும் நலம் பயப்பதொன்றே யாயினும், அதனைக் காட்டினுஞ் செய்யுளாற் பெறப்படும் பயன் சாலவும் பெரிதாம் என்கிறார்.

மேலும், "பாட்டெல்லாம் அறிவு நிலையைப் பற்றிக் கொண்டு போய் உயிர்களின் உணர்வு நிலையை எழுப்பி விடுவதாகும். உரையெல்லாம் அறிவு நிலையைப் பற்றியே நிகழுமல்லது அதன்மேற் சென்று உணர்வு நிலையைத் தொடமாட்டாதாகும். பெரியதோர் மலை முழைஞ்சினுட் பொன்னும் மணியும் சிதறிக் கிடத்தல் வியப்பன்று; ஒரு சிறு கற்பிளவிலே அரிய பெரிய முழு மணிகள் அடுக்கடுக்காய்க் கிடந்து எடுக்குந்தோறும் குறைபடாதிருத்தலே பெரிதும் வியக்கற்பாலதாம். சிறிய வான்மீன்கள் அகன்ற அவ்வானத்திற் காணப்படுதல் ஒரு வியப்பன்று; அகன்றவானும் வேறு மாடமாளிகை கூட கோபுரங்களும் ஒரு சிறிய கண்ணாடியினுட் காணப்படுதலே மிகவும் வியக்கற்பாலதாம். எனப் பெரிய உரைக்கும், சிறிய பாவுக்கும் உள்ள இயல்பை விளக்குகிறார்.