பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

149

மாணிக்கவாசகர் வரலாறும் ஆய்வும் 164 பக்கங்களைக் கொண்டுள்ளது. பிறப்பு முதல், சிவ வொளியில் மறைந்தமை வரை பதினெண் பகுப்புகளில் அப்பகுதி அமைந்துள்ளது.

பெயர் மாணிக்கவாசகர் பிறப்பு என்னும் முதற்பகுதியில் இவர் தாய் தந்தையார் பெயர் புலப்படவில்லை என்கிறார்.

தந்தையார் பெயர் சம்பு பாதாசிரியர் என்றும் தாயார் பெயர் சிவஞான வதியார் என்றும் சிலர் வழங்குவதை மறுக்கின்றார்.

இப்பெயர்களை,

நம்பியார் திருவிளையாடலோ, திருவாதவூரர் புராணமோ கூறவில்லை. இத்தகைய பெயர்கள் பழைய நாளில் இருந்த தமிழர்க்குள் வழங்கப்படவில்லை என ரண்டு காரணங்களைக் காட்டுகிறார்.

திருஞானசம்பந்தர் தந்தையார் பெயர் சிவபாதவிருதயர், தாயார் பெயர் பகவதியார் என்பதை

உளங்கொண்ட பிற்காலத்தார் எவரோ இப்பெயர்களைப் புனைந்து கட்டி விட்டனர் என்கிறார்.

ன்னதென்று

மாணிக்கவாசகரின் பிள்ளைப் பெயர் புலனாகவில்லை என்னும் இவர், திருவாதவூரர் மாணிக்கவாசகர் என்னும் பெயர்கள் இயற் பெயர்கள் அல்ல என்கிறார். பரஞ்சோதியார் மணிவாசகர் காலம்பாண்டியன் அரிமர்த்தனன் என்று சொல்லியது சான்று அற்றது அப்பெயர் வடமொழிப் பெயராதலால் ஐயுறற் பாலது என்கிறார்.

இறைவன் அருள் பெற்றது வரையான வரலாறுகளை எடுத்துரைத்த அளவில் “அருள் பெற்ற வரையுள்ள ஆய்வு" என ஆய்கின்றார்.

திருப்பெருந்துறையை அடுத்த அளவில், அன்பின்மிக்கு அங்கே வைகுதல் கருதித் தம்மொடு வந்தாரிடம் ஆவணித் திங்களில் பரிகள் அடையும் என்று அரசற்கு அறிவிக்கக் கூறியதால் திரும்பினர் என நம்பி திருவிளையாடல் கூறுகிறது. திருவாதவூரர் புராணமோ, மணிவாசகர் மனமாற்றம் கண்டு உடன்வந்தார் தாமே திரும்பி வேந்தனிடம் உரைத்தனர் என்கிறது.

உளவியல் :

இவ்விரண்டனுள் புராண

உரையே

பொருத்தமானது என்கிறார் அடிகளார். 'திருப்பெருந்துறையை அணுகியவுடன் தமக்கு நேர்ந்த உள்ள உருக்கத்தைக் கண்டு