பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

13.

14.

228

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

குருக்கள்மார், தமிழ்மொழிப்பயிற்சி சைவசித்தாந்தம் உணர்தல் தேவார திருவாசகம் ஓதல் வல்லவராய் இருக்கும்படி செய்தல் வேண்டும்.

வரும்படி மிக்க கோயில்களில் இருந்து வரும்படி இல்லாக் கோயில் குருக்களுக்குத் தக்க சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.

இறைவன் திருவுருவத்திற்குக் குருக்கள்மாரே வழிபாடு செய்ய வேண்டுமல்லாமல் வணங்கப் போகிறவர் களெல்லாம் தொட்டுப்பூசித்தல் வேண்டுமென்பது நல்ல முறையன்று.

வணங்கச் செல்வோர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று காட்டும் வேறுபாடு அடியோடு நீக்கப்படல் வேண்டும்.

கோயில் செலவு போக மிச்சத்தைத் தேவாரப் பாடசாலைக்கும் தனித்தமிழ்ப் பாடசாலைக்கும் சைவ சித்தாந்த சபைக்கும் தமிழ்நூல் எழுதுவார்க்கும் சைவசித்தாந்த விரிவுரையாளர்க்கும் வழங்கல் வேண்டும்.

கோயில் வரும்படி கொண்டு பார்ப்பனர்கட்கு மட்டும் உணவு கொடுத்தலும் ஆரியவேத பாட சாலை அமைத்தலும் ஆங்கிலப் பள்ளிக் கூடங்கட்குப் பொரு ளுதவி செய்தலும் அடியோடு நீக்கப்பட வேண்டும். சிறுபருவமணத்தை ஒழித்தல் வேண்டும். பெண் மக்களுக்கு 20 ஆண்டும் ஆண்மக்களுக்கு 25 ஆண்டும் நிரம்பு முன் மணஞ் செய்தல் ஆகாது.

ஆணையாவது பெண்ணையாவது விலை கொடுத்து வாங்கும் கொடிய பழக்கத்தை வேரொடு களைவதற்கு எல்லாரும் மடிகட்டி நிற்றல் வேண்டும்.

முப்பதாண்டுகட் குட்பட்ட பெண்கள் கணவனை இழந்து விடுவார்களானால் அவர்களைத் திருமணம் செய்து கொடுத்தல் வேண்டும்.

ஆண்மக்களில் 40 ஆண்டுக்கு மேற்பட்டவர்கள் இளம் பெண்களை மணம் செய்தல் ஆகாது.