பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

8.

9.

10.

இளங்குமரனார் தமிழ் வளம்

228

செயல்களாற் பெண்களைத் துன்புறுத்தல் ஒவ்வாது. எனவே கைம்பெண்மணம் செயல் முறைக்கு வர அறிஞர்கள் நன்முயற்சி செய்தல் வேண்டும்.

சாதிக் கலப்பு மணம் வரவேற்கத் தக்கது.

தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும்.

தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ.சிறப்பு வகுப்பு (பி.ஏ. ஆனர்சு) ஏற்படுத்தல் வேண்டும்.

தமிழர்மதம்

அடிகளாரின் சமய நோக்கு இன்னது என்பதை ஆற்றொழுக்கெனச் சொல்லிச் செல்வதொரு நூல் தமிழர் மதம். அதன் பெயரே "தமிழர்" என்னும் ஒருமைப் பெயர் கொண்டு விளங்கும் உயர்வை வெளிப்படுத்தும். மற்றவற்றுள் "சைவம்" என்ற அடிகள் தமிழர் மதம் என்னும் பெருநிலையில் கண்ட மாட்சி அது. அதில் உள்ளவற்றை அவர்தம் மாணவர் தவத்திரு அழகரடிகள் "மறைமலையடிகளார் வரலாற்று மாட்சியில் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இங்குச் சுட்டப் பெற்றவற்றுடன் வேறு சிலவும் கொண்ட அத் தொகுப்புரை காண்க :

1.

2.

3.

4.

5.

தமிழர்கள் தமது பழம் பெருமையை யுணர்ந்து அதற்கேற்ப நடத்தல் வேண்டும்.

தமிழ்மொழியைத் தூய்தாய் வளனுற வளர்த்து வருதல் வேண்டும்.

தமிழ் கற்பார் சிலரும் அடிமை வாழ்க்கையையே தமக்கொரு பெருமை வாழ்க்கையாகவும் பிழைபட நினைந்து.. ஒழுகுகின்றார் (இதனை அகற்றல் வேண்டும்) பண்டுபோல் தமக்கும் தம் இல்லங்களுக்கும் தம் ஊர்களுக்கும் பிறவற்றிற்கும் எல்லாம் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டும்.

தமிழரெல்லாரும் தம்மைத் தமிழரென்றே வழங்கக் கடமைப்பட்டிருக்கின்றனர். தம்மை எவரும் சூத்திரர் என்னும் இழிசொல்லால் அழைக்க இடந்தரலாகாது. தாழ்ந்த வகுப்பினராய் இருப்பவரை இழித்துப் பேசுதலும் அழைத்தலும் ஒரு சிறிதும் கூடாது.