பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

203

அடிகளார் கொண்ட சமய நோக்குகளை விரித்தும் விளக்கியும் கூறாமல் தொகுத்தும் சுருக்கியும் கூறியவை இவை. சான்றுகளும் சிலவாகவே உடையவை.

சீர்திருத்தம் என்னும் கட்டுரையில் காட்டிய குறிப்புகள், பொது நிலைக்கழகத் தீர்மானங்கள், மறைமலையடிகளார் வரலாற்று மாட்சியில் குறிக்கப்பட்ட தொகுப்புக் குறிப்பு என்னும் மூன்றாலும் பிறவற்றாலும் மறைமலையடிகளாரின் சமய நோக்கள் இவை என்பது தெளிவாக விளங்கும்.

சமயம் என்பது பண்படுத்தும் கருவி; பாதுகாப்பு அரண்; குமுகாய (சமுதாய) வளர்ச்சிக் கல்வி நிலையம்; ஒட்டுமொத்த உயிர்களின் இறைமை உறையள் - என்னும் முடிவில் அடிகளார் விரிபார்வை அமைந்தது என்பது இவற்றால் புரியும் செய்தியாம்!

-

சமயம் கண்மூடித்தனத்தின் வைப்பகம் அன்று; சீர்திருத்தத்தின் வைப்பகம் பரப்பகம் என்பதை அடிகளார் நோக்கிலே புரிந்து செயலாக்கம் பெற்றிருப்பின், எத்துணையோ நலங்களைத் தமிழுலகம் கண்டிருக்கும். அந்நிலை இனிமே முன்புலேனும் எய்துமாக!