பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பாராட்டு விழாவில் செட்டிகுளம் பாவாணர் நூல் வெளியீட்டுக்குழு, 85 அடிகளைக் கொண்டபரிபாடல் ஒன்றனைப் பாராட்டுரையாக அச்சிட்டு வழங்கியது: அதில் சில அடிகள்:

“மண்ணெனப் பரந்தமனத்தை; மனத்தில் விண்ணென உயர்ந்த கோளினை; கோளில் நீரென ஆழ்ந்தநிலையை; நிலையில் தீயென ஒளிரும் தெளிவினை; தெளிவில் வளியென விரையும் வழக்கினை; அதனால் ஏமுறு மைஞ்சூர் ஏந்தல் நீயென காமுறு தமிழின கடலினைத்

தேமுறு தமிழாற் சேர்த்ததும் மலிந்தே... சொல்லா ராய்ச்சிக் கட்டுரை கள்சொற்ற வல்லா ராய்ச்சி வளத்தன்நீ

உயர்தரக் கட்டுரை இலக்கணம் தந்தியாம் உயர்தரக் கட்டுரை ஒருவன் நீ

அடங்கு நெஞ்சினை

அடங்கா உளத்தினை

நுடங்கு காட்சியை நுடங்கா நோக்கினை

மடங்கு வழியினை

மடங்கா நெறியை

அதன்மேல்,

வண்டமிழின் தெவ்வை மடக்கும் மடங்கலாய்த்

தண்டமிழ் காக்குவை நீ

தமிழர் பகையைச் சரித்தே ஒழிக்கும்

இமிழ்வார் மதகரி நீ

தமிழக நச்சைத் தடிந்தே அழிக்கும்

அமிழ்தக் கலையமாம் நீ

உலகோர் தமிழ்மாண் புணரச்செய்யும்

இலகு தமிழ்ப் பரிதி நீ

எனவாங்குச்,

சொல்வதையெல்லாம் தொழுதகை நின்செயல்

வெல்வ தாக விரிதலின்