பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

"கால்கடுத்துக் கொப்புளிக்கக் காதம் பலநடந்து நூல்வடித்துச் சொல்லினும் நொய்தரார் - பாலடுத்து வேறொருவர் கூறினும் வெண்படத்துங் கண்டிரார்க்கு மாறிலாதீந் தார்கிருட்டி ணர்".

இது, பதிகத்தின் நான்காம்பா. நன்றியுரையகவல், அன்புறு வெண் பொன் ஐயாயிர மெனத் தொகை சுட்டுகின்றது.

பாவாணர் நூல் வெளியீட்டுக்கு உதவிய புகழ்க் கொடைகள் இவை இக்கொடையாளர்தாமே, பாவாணர் அறிவுக் கொடையைத் தமிழுலகு கூட்டுண்ண ஆற்றுப்படுத்திய வண்மையர்! தனித்தனிக் கொடையாளர் -திங்கள் கொடையாளர் எனத் தக்கார் சிலர் பலராதல் எண்ணத்தக்கதே!