பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

தவத்திரு. குன்றக்குடி அடிகளார் 1001 உரூபாவும், திருப்புத்தூர் வள்ளல் ஆறுமுகனார் 1001உரூபாவும், கருமுத்து தியாகராசர் 500 உரூபாவும் தந்து சிறப்பித்தனர். மாணவர்களும் தமிழ்ப்பற்றாளர்களும் தங்களால் இயன்ற பங்கு கொண்டனர். ஆகமொத்தம் 7362 உரூபா 58 காசு திரண்டது.

விழாவுக்கு அறிஞர் அண்ணா வாழ்த்து விடுத்தார்.திரு. தேவநேயப்பாவாணரின் மணிவிழா நடப்பதறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

பாவாணர் தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இடை விடாத நற்றொண்டாற்றி நம் அனைவரின் நிலையினையும் உயர்த்தியவர். அவருடைய புலமையும், தெளிவும் துணிவுமிக்கது. தமிழ்மொழியின் தூய்மையும் வளமும் எத்தகையது என்பதனை ஆய்ந்தறிந்து தெரிவித்த பெருமகனாரிடம் தமிழிடம் பற்றுக் கொண்ட எவருக்கும் பெருமதிப்பு ஏற்படாதிருக்க முடியாது.

தமிழ்ப்பெருநூல்கள் தமிழரால் நன்கு கற்று உணரப்பட்டு, தமிழ்நெறியில் தமிழர் நின்று வென்றிடல் வேண்டுமென்பதில் தளராத விருப்பம் கொண்டோர்க்கெல்லாம் பாவாணரின் புலமை நம்பிக்கை தந்து வருகின்றது.

பாவாணர்மேலும் பல ஆண்டுகள் இனிது வாழ்ந்திருந்து தமிழ் மொழிக்கான தொண்டாற்றிவருதல் வேண்டும் என்ற வேண்டுகோளை, அவருக்காக நடத்தப்படும் மணிவிழா நிகழ்ச்சியின்போது நான் எடுத்துத் கூறும் நல்லெண்ணச் செய்தி என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பெரியாருக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க பாவாணர்! வெல்க தமிழ்.

தமிழ்ப்பாவை

அன்பன்,

அண்ணாதுரை

பாவாணர் தமிழுக்குச் செய்த பணியினையும் தொண்டி னையும் பாராட்ட மதுரையிலுள்ள என் உழுவலன் பர்கள் இந்த விழா எடுத்தது கண்டு மிக மிக மகிழ்கின்றேன்.