பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

அமர்த்தப் பெற்றுத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தமிழ்ச் சொற்களின் வேர் முதலைத் தகவுற ஆராயும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியாக அது திகழும்.

வாழ்நாள் முழுவதையும் தமிழ்வளர்ச்சிக்கும் தமிழ் ஆராய்ச்சிக்குமே ஒதுக்கிய இத்தமிழ்ப் பெரு மகனாரைப் பாராட்டி இத் திருவள்ளுவர் திருநாளில் 'செந்தமிழ்ச் செல்வர்’ என்னும் சீரிய விருதினைத் தமிழ் நாடு அரசு வழங்கி மகிழ்கிறது” என்பது அது.