பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

151

உலகத் தமிழ்க் கழக உறுப்பினர்களுக்கு அறிவிப்பு

அருந்தமிழன்பர்காள்,

ஒவ்வோர் இயக்க வளர்ச்சிக்கும் அதற்குரிய ஒரு சிறப்பிதழ் இன்றியமையாதது அதனாலேயே பெரியார் 'குடியரசு' ‘விடுதலை' என்னும் இதழ்களுடன் தம் இயக்கத்தை நடத்தி வந்தார்.

உ.த.க. இதழாயிருந்த தென்மொழி சில கரணியங்களால் நின்றுவிட்டது. இன்று அதற்குப் பகரமாக வெளிவருவது மீட்போலை ஒன்றே. தனித் தமிழைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள வேறு இரண்டோரிதழ்கள் இருப்பினும் அவற்றிற்கும் மீட்போலைக்கும் கொள்கையில் வேறுபாடுண்டு. ஆதலால், உ.த.க. கொள்கையை முழுத்தூய்மையாகக் கொண்ட மீட்போலையையே உறுப்பினர்அனைவரும் முதன்மையாக வாங்குதல்வேண்டும்.

ஒவ்வோர் உ.த.க. கிளையும் ஒரு படி வாங்குதல் இன்றிய மையாதது. கிளையில்லா விடத்தில் தனித்தமிழ்ப் பற்றாளர் தனித்தோ இணைந்தோ ஒவ்வொரு படி வாங்கலாம்.

கிளைகளும் தனி உறுப்பினரும் இன்றிருந்து படி யொன்றிற்கு ஆண்டிற்கு ரூ (ஐந்து) உருபா மேனி முன்பணமாக அனுப்பி விடுக. செல்வராயிருப்பவர் தமித்தும் வாங்கி இதழாசிரியரை ஊக்கலாம். படிகள் பெருகப் பெருக இழப்புக் குன்றும். இதழும் வளர்ச்சியடையும். தாள்விலைமிக ஏறியுள்ள இக்காலத்தில் 5 உருபா உயர் தொகையன்று.

தமிழர் சிறுபான்மையராகவும் பெரும்பாலும் எளியராகவும் வாயில்லாதவராகவும் ஆரியச் சார்புமிக்க ஒரு திராவிட நாட்டில் (கன்னட நாட்டில்) வையாபுரிகள் நடுவில் இருந்து கொண்டு ஓர் அர சினர் மகளிர் கல்லூரியில் தன்னந்தனியான தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஒருவர் தம் நெருக்கமான வேலைகட்கிடையே போதிய பணவுதவியுமின்றி ஒரு தனித்தமிழ் இதழை நடத்தி வருவது அரிதும் பெரிதும் பாராட்டத்தக்கது மாகும்.

ஆதலால், அவர்சிறிதும் தளர்ச்சியுறாவண்ணம் அவரை மேன்மேலும் ஊக்கிவருவது உண்மைத்தமிழர் அனைவர் தலைமேலும் விழுந்த தலையாய கடமையாகும்.