பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

155

உ.த.க. கொடி

கொடிநிற அமைப்பு வகைகள் :

வானநீலம், வெள்ளை, அரத்தச்சிவப்பு (கொடிக்கு

எழுவகை அமைப்புகளை வரைந்துள்ளார் பாவாணர்).

நிறவிளக்கம்:

1. வானநீன்மை நீலவானத்தையும் நீலக்கடலையும் குறித்து வியனுலகியன்மையை (Universality) உணர்த்தும்.

2. வெண்மை தமிழின் தூய்மையையும் தமிழ்ப் பண்பாட்டுத் தூய்மையையும் பகையின்மையையும் உணர்த்தும்.

3. செம்மை செல்வம் மறவம் ஈகம் (தியாகம்) ஆகியவற்றை உணர்த்தும் (திரு.மி.மு.சி; 8-12-70)

உலகத் தமிழ்க் கழகம் நடத்திய தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கு.

சை

31-12-72 ஞாயிறு அன்று, தஞ்சை அரண்மனை இ மன்றத்தில்உலகத் தமிழ்க் கழகம் தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கு என்னும் பெயரில் ஓர் அறை கூவல் மாநாட்டைக் கூட்டியது.

இம்மாநாட்டில் தமிழன் பிறந்தகம் குமரிநாடே என்னும் கருத்திற்குச் சார்பாக மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்பேரா. கோ. நிலவழகனார், திரு. சொல்லழகனார் ஆகியோர்தக்க சான்று காட்டி நிறுவுவதாகவும்,

பேரா. கே.ஏ.நீலகண்டர் (சாத்திரியர்)பர்.சுநீதி குமார் சட்டர்சி,பர். தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், தனிநாயக அடிகள், பர்.வி.ஐ. சுப்பிரமணியம்ஆகியோர் அக்கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிடில் தக்க சான்றுகள் காட்டி மறுக்க வேண்டும் என்றும்.

இவ்விருசாரார் கருத்துகளையும் கேட்டு, மாநாட்டிறுதியில் திரு. குன்றக்குடி அடிகளார், திரு. காஞ்சி ஞானப் பிரகாச அடிகளார், திரு. அழகரடிகள், அரச வயவர் திரு முத்தையா, திரு. கருமுத்து தியாகராசர், புதுப்புனைவாளர் கோவை திரு. கோ. துரைசாமி (G.D. Naidu), பர். திரு. மணவான ராமானுசம் பர்.