பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

திரு.வ.சுப.மாணிக்கனார் பெரும்புலவர் நீ. கந்தசாமி உரை வேந்தர் திரு. ஒளவை சு. துரைசாமை, பெரும் புலவர் திரு.மே.வீ. வேணுகோபாலனார், வரலாற்று அறிஞர் திரு. மயிலை, சீனி. வேங்கடசாமி ஆகிய பன்னிருவரும் அடங்கிய நடுவர் குழு அக்கொள்கை பற்றி அறுதியும் உறுதியும் இறுதியுமான தீர்ப்பு வழங்கவேண்டுமென்றும் ஏற்பாடுகள் செய்யப் பெற்றிருந்தன

tt

இக்கருத்தரங்கு அறை கூவல் மாநாடு தி.பி. 2003 அலவன் 29-ஆம் பக்கல்ஞாயிறு அன்று, காட்டுப் பாடியில்நிகழ்ந்த உலகத்தமிழ்க் கழக ஆட்சிக் குழுவின் தீர்மானப்படி கட்சித் தலைவரும் மொழிப் பேரறிஞருமாகிய பெரும் பேராசிரியர் ஞா. தேவ நேயப் பாவாணர் அவர்களால் கூட்டுவிக்கப் பெற்றதாகும். இம் மாநாட்டுக்கு வரவேற்புக் குழுத்தலைவர் திரு.த.ச. தமிழனார். புலவர் திரு. சா. அடலெழிலனார்செயலாளர்; பொருளாளர்திரு. செங்கை. செந்தமிழ்க் கிழார். கண்காணகர் திரு. இறைக்குருவனார்.

நடுவராக அழைக்கப் பெற்றோருள் மூவர் உடல்நல மின்மை காட்டி இசைந்திலர். ஏனையோர் இசைந்து எழுதினர். எனினும் மாநாட்டுக்கு நீ. கந்தசாமியார், கோ. துரைசாமியார், வ.சுப.மாணிக்கனார்ஆகிய மூவர் மட்டுமே வந்திருந்தனர். மற்றையோர் வரவியலாமை தெரிவித்திருந்தனர்.

31-12-72 ஞாயிறு காலை 9-15 மணிக்குத் தஞ்சைத் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து நீண்டதோர் ஊர்வலம் புறப்பட்டது. ஊர் வலத்தின் பின் கழகத்தலைவர் பாவாணர் இன்னியங்கியில் வந்தார்.

காலை 10-30 மணியளவில் நீ. கந்தசாமியார் தலைமையில் மாநாடு தொடங்கியது, இசைப்பேரறிஞர் சுந்தரேசனார் தமிழ் வாழ்த்துப் பாடினார்.த.ச.தமிழனார் வரவேற்புரை நிகழ்த்தினார். கோ. நிலவழகனார், வீ.ப.கா. சொல்லழகனார், உரைக்குப்பின் பாவாணர்உரையாற்றினார். இக்கருத்தரங்கு ஆரியர் தம் பொய்க் கூற்றையும் நம் வையாபுரிகளின் புரட்டுகளையும் அம்பலப்படுத்தவே கூட்டப் பெற்றதென்றும், எதிர்க் கழித்துக் கொண்டவர்கள் நேரிடையாகத் தம் கருத்துகளை வெளிப்படுத்த அஞ்சுகிறார்கள் என்றும், மறைமுகமாகப் பலகேடுகளைத் தமிழுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் செய்து வருகிறார்கள் என்றும், வேண்டுமானால் இக் கருத்தரங்கால் நிறைவுறாதவர்கள் தாமே ஒரு கருத்தரங்கைக்