பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

163

கொண்டிருந்த மாவட்ட மன்ற நடுவர் ஒருவர் "என்னையா எச்சம், எச்சம் என்று, காக்கை குருவியும்தான் எச்சம் போடுகிறது" என்றார். சற்றும் அதனைக் கேட்டுத் திகைப்போ விதிர்ப்போ அடையாமல் பாவாணர், "ஆமாம்; வழக்குரைஞர் பார்ப்பதும் 'கேஸ்' (case) தான்; பண்டுவர் பார்ப்பதும் கேஸ் தான்; பொருள்கள் வைப்பதும் 'கேஸ்'தான்; கேஸ் என்பதற்கு எத்தனை பொருள்கள்; எச்சம் என்னும் ஒருசொற் பல பொருளுக்கும் அப்படித்தான் என்றார்.

இதனைக் கூறியவர் அறிஞர் தமிழண்ணல். பகலுணவும் இராவுணவும்

"ஒருகால் பேராசிரியர் தேவநேயப் பாவாணர் அவர்கள் ஆசிரிய நண்பர்கள் சிலருடன் தாரைமங்கலம் என்னும் சிற்றூர் போய் இரவு தங்கியிருந்து மறுநாட் காலையில் திரும்பிவந்தார்.

அவரை அன்பர் சிலர் சூழ்ந்துகொண்டு, ஊர்போய் வந்த வகைபற்றி உசாவினர். அவருள் ஒருவர், "ஐயா பகலுணவும் இராவுணவும் எவ்வாறு இருந்தன" என்றார். பாவாணர் பகல் உணவு 'பகல்' உணவாகவும், இரா உணவு 'இரா' உணவாகவும் இருந்தன" என்றார்.

பகல் உணவு என்றதில்பகலில் கிடைத்த சிறிதளவு உணவையே அனைவரும் பகுத்துண்ண நேர்ந்ததெனவும், இரா உணவு என்பதில் அனைவரும் உணவின்றி இரவைக் கழிக்க வேண்டியிருந்ததெனவும் உணர்ந்து கொண்டு கூடியிருந்தவர் மகிழ்ந்தனர். பசியும் பட்டினியும் தமிழ் வளத்தால் பறந்து விடுகின்றதே."

தென்மொழி பாவாணர் நினைவிதழ் பக். 42 மன்னிக்க - உருதுச்சொல்

பாவாணர் பால் வாங்கிக்கொண்டு தெருவில் நடந்து வந்தார். எதிரே மிதிவண்டியில் வந்த ஒருவர் அவர் மேல் மோதித் தள்ளிப் பாலும் கொட்டிப்போகச் செய்தார். தாம் செய்ததே தவறு என வருந்திய மிதிவண்டி ஓட்டி, ய "ஐயா மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார். 'மன்னிப்பு' உருதுச்சொல்; பொறுத்துக் கொள்க” என்று சொலுங்கள் என்றார். அந்த இடர்ப்பொழுதிலும் சொல்லாய்வு செய்யும் இந்த விந்தை மாந்தரை வியப்போடு