பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

உயர் குணமுமுள்ள பெண் உம் இனத்தில் இருந்தால் உடனே தெரிவிக்க. வந்து பார்க்கச் சொல்கிறேன். மணமக்கள் வீட்டார் கொங்கு வெள்ளாண் குடியினரே."

மறை. நித். 17-8-71.

பெண்பார்ப்பவரும் மாப்பிள்ளை பார்ப்பவரும் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைச் சுட்டும் பாவாணப் பார்வை தமிழ் மணம்:

பேராசிரியர்

து.

ஒளவை துரைசாமிப் பிள்ளையும், பாவாணரும் ஓரிடத்தில் இருந்து உரையாடிக் கொண்டிருந் தனர். அவ்விடத்திற்குப் பாவேந்தர் சென்றார். இரண்டு மூன்று முறை மூக்கை உறிஞ்சினார் பாவேந்தர்.

“ஏன் மூக்கை உறிஞ்சுகிறீர்கள்? உடல் நலம் இல்லையா? என்றார் பாவாணர்.

"உங்கள் இருவரையும் காணும் போது தமிழ்மணம் கமழ்கிறது" என்றார் பாவேந்தர்.

- பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.

வரலாற்று வரைவில் ஓர் ஒழுங்கு வேண்டும் என்கிறார் பாவாணர்: வரலாற்றுச் செய்திகளும் எடுத்துக் காட்டுகிறார். அவை மிகப்பல. அவற்றுள் சில; "ஒருவர் வளர்ந்து பெரியவரான பின் திரும்பவும் குழந்தையாதல் கூடாமையின் ஒருவரைப்பற்றி வரையும் போது இளம் பருவத்தைக் கூறும் பகுதியில் ஒருமைப் பாலிலும், வளர்ந்த பருவத்தைக் கூறும் பகுதியில் உயர்வுப் பன்மைப்பாலிலுமாக வேறுபட வரைவது பொருந்தாது"

-

கட்டுரை வரைவியல். 114.

,

ஒருவரைப் பற்றிக் கட்டுரை வரையும்போது அவரைக் குறித்த சுட்டுப் பெயரை முதலில் 'அவர்' என்று உயர்வுப் பன்மையில் தொடங்கினால் இறுதிவரை 'அவர்' என்றே யெழுதுதல்வேண்டும். அவன் அவள் என்று ஒருமைப் பாலில் தொடங்கினால் இறுதிவரை அங்ஙனமே இருத்தல் வேண்டும். உயர்ந்தோரை யெல்லாம் உயர்வுப்பன்மையிலேயே கூறல் வேண்டும்.

ஷை