பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

செந்தமிழ்க்கிழார், த.ச. தமிழனார், மு. பாவாணனார், ந. அரணமுறுவல், க.தமிழமல்லனார், அன்புவாணர், சங்கரலிங்கனார், சிங்கை வீரப்பனார், தங்க வயல் வெற்றிச் செல்வனார் ஆகியோர் பங்கு கொண்டு கருத்துரைத்தனர். ஓரிரு திங்களில் புதுக் கோட்டையில் உ.த.க செயற்குழுவைக் கூட்டுவதென்று முடிவு செய்தனர். நகரப் பெரியவர் என மதிக்கப்படும் 'செரீப்பு' அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 29-1-81 மாலையில் நகரப் பெருமக்கள் கலந்து கொள்ளும் வகையில் இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ம. கோ. இரா.முதலாக, அமைச்சர்களும் அறிஞர்களும் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர். இவ்வேற்பாடும் எத்தமிழறிஞர்க்கும் செய்யப்படாத ஏற்பாடாகும்!

அவ்விரங்கலில் கலந்து கொண்டோர்கள்; திருவாளர்கள் ம.பொ.சி; கே.இராசாராம்; எம்.பி. சுப்பிரமணியம்; ப.உ. சண்முகம்; பி, மாணிக்கம் ; டி.என்.அனந்தநாயகி; குமரி அனத்நன்; ப. நெடுமாறன்; சந்தோசம்; அபிபுல்லாபேக்; மெ. சுந்தரம்; பிரன்சிசு ராயன்; மூர்த்தி; வை. பாலசுந்தரம் ஆகியோர்.

இக்கூட்டத்திலே பேசிய முதல்வர் "தமிழ்மொழி ஆராய்ச்சியில் பாவாணரின் விளக்கம் நம்மைத் தலை நிமிர்ந்து நிற்க வைக்கின்றது. அவருடைய கருத்துக்கள் தமிழின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. பாவாணர் ஒவ்வொரு தமிழ்ச் சொல்லையும் ஆராய்ந்து இருக்கிறார். தமிழரின் தகுதிக்கு உண்மையான ஆதாரங்களைத் தந்தவர் பாவாணர். அவரை நான் தமிழ்த் தெய்வமாகக் கருதுகிறேன்" என்றார். இதனினும் மேலே சென்று,

66

அரசு நூல் நிலையங்களுக்கு இதுவரை எந்தத் தனிப் பெயரும் தரப்படவில்லை. இனி அரசு நூல் நிலையத்திற்குப் பாவாணர் பெயர் வைக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.

தமக்கும் அவர்க்கும் எட்டாண்டுகளின் முன்னரே தொடர்புண்டு என்பதையும் சுட்டினார் முதல்வர்:

"1972 ஆம் ஆண்டு அ.தி.மு.க. துவக்கப்பட்ட நேரத்தில் பாவாணர் என்னைச் சந்தித்துப் பேசினார்.அப்போதே அவருக்கு அகரமுதலி தயாரிக்கும் எண்ணம் இருந்ததை வெளிப்படுத்தினார். இறுதி வரையும் அந்த எண்ணத்தின் படியே பணியாற்றினார்!