பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

223

சிக்கல் ஏற்படுவது மிகவும் குறையும். மனவிைக்குத் தமிழ்ப் பண்பாடு கெடாத அளவுக்கு உரிமை வழங்குவதில் தவறில்லை"- இவை தமிழ்க் குடுப்த்தார்க்குப் பாவாணர் உரைத்த வாழ்வியலுரை.

-நாங்கள் காணும் பாவாணர். பக்.25

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனப் பாவாணர் அறக்கட்டளை:

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ச.வே. சுப்பிரமணியனார் தூண்டலால், மாதந்தோறும் அறக்கட்டளைச் சொற்பொழிவொன்று நிகழ்த்தவேண்டும் என்னும் திட்டத்தில் நிறுவப்பட்ட ஒன்று மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறக்கட்டளைப் பொழிவுத் திட்டமாகும். இத்திட்டத்தின் வைப்புத்தொகை உருபா பத்தாயிரம். இத்திட்டத்திற்குப் பெருந்தொகை வழங்கிய பேரார்வலர் சிங்கை வணிகவியற் கல்லூரி முதல்வர் கோவலங் கண்ணனார் ஆவர்.

இத்திட்டத்தின் தனிச் சிறப்பு பொழிவு நாளிலேயே பொழிவுநூல் வெளியிடுதல் என்பதாகும். இவ்வகையால் மூவாண்டு முப்பொழிவுகளில் மூன்று நூல்கள் வெளி வந்துள்ளன. அதன்பின், திட்டம் நெட்டுறக்கங் கொண்டுள்ளது. சொற்பொழிவு 1. 1985 சனவரி; முனைவர் மு. தமிழ்க்

குடிமகனார் பொழிவு;

நூல்: பாவாணரும் தனித்தமிழும்.

சொற்பொழிவு 2. 1985 பெப்ரவரி; புலவர் இரா.

இளங்குமரன் பொழிவு;

நூல்: தேவநேயப்பாவாணரின்

சொல்லாய்வுகள்.

சொற்பொழிவு 3. 1986 ... பேரா. கு. பூங்காவனம் பொழிவு. நூல்: உலகமுதன்மொழி - தமிழ்.

பாவாணர் பதிப்பகம், பெங்களூர்.

9-3-84 மாலை 6-30 மணிக்கு பெங்களூர், 156, வீரப்பிள்ளைத் தெரு, குமரிமின் அச்சகத்தில் நடைபெற்ற கருத்துரைக் கூட்டத்தில் பாவாணர் பதிப்பகம் நிறுவுதல் பற்றி முடிவாகி ஏற்றுக்கொள்ளப்பட்டது.