பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. படைப்பும் பல்கும்

நேசமணியம்மையார் நினைவு வெளியீடு -1.

இசைத்தமிழ்க் கலம்பகம்

முதற்பாகம் முதற்பதிப்பு 1966

சேலம் நகராண்மைக்

கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியன் மதுரைப்பண்டிதன் நெல்லைப் புலவன் சென்னைப் புலவ (வித்துவ) கலைத் தலைவன் (எம்.ஏ.) ஞா. தேவநேயன்

பாடியது.

(குறியீட்டு விளக்கம், பாயிரம், காப்பு, இசையாசிரிய வணக்கம் என்பவற்றுடன் நூல் 303 இசைப்பாடல்களால் இயல்கின்றது. தமிழ், தமிழகம், தமிழர், ஆரியம், ஆங்கிலம், இந்தி, தமிழர் கடமை, சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி இன்னவாறானவை பற்றிய இசைப்பாடல்கள் இவை. தமிழ் வளர்ப்போர், தமிழ்த் தொண்டு செய்யும் அமைப்பு, பல்வேறு வாழ்த்து இன்னவும் இந்நூலில் உண்டு. தமக்கு உதவி செய்தோரைப் பற்றிய நன்றிப்பாடலும் இதன் கண் உண்டு. "எல்லாரும் இன்பமுறவே இறைவனருளால் மங்கலம்" என நூல்நிறைகின்றது.

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதன் நெல்லைத் தமிழ்ச் சங்கப் புலவன், சென்னைப் பல்கலைக் கழகப்புலவ கலைத் தலைவன், மேனாள் சேலம் நகராட்சிக் கல்லூரித் தலைவன், மேனாள் சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியன் ஞா. தேவநேயன் எழுதியது.

ஆசிரியர் வெளியீடு. 1968. ஆசிரியர் உரிமையது.