பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

GFOLD, 4-11-50.

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

(இந்நூல் தொடரியல், மரபியல், கட்டுரையியல் என மூவியல்களையுடையது; இம்முதற்பாகம் முதலியலைக் கொண்டது. "இந்நூல் ஒரு புதுமுறையில் முதன்முதல் எழுதப் பெற்றதாகலின் இதிலுள்ள குற்றங்குறைகளை அறிஞர் எடுத்துக் காட்டின் அவற்றை அடுத்த பதிப்பில் நன்றியறிதலுடன் திருத்திக் கொள்வேன் என்கிறார். நூல் பக்கம் 284. நூலுரிமை எஸ்.டி.சுந்தரராஜ்)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கழக வெளியீடு: 908

இரண்டாம் பாகம்

சேலம் நகராண்மைக் கல்லூரித் தமிழ்த் திணைக்களத் தலைவர் பண்டித புலவ வித்துவ ஞா. தேவநேயன் எம். ஏ., இயற்றியது.

முதற்பதிப்பு : நவம்பர் 1951.

இரண்டாம் பதிப்பு : மார்ச்சு 1968.

(மரபியலும் கட்டுரையியலும் கொண்டது. பக். 251 முகவுரை மஇடம் நாள் : சேலம், 23-8-1951 "ஞா.தே. உரிமை : ஞானமுத்து தேவநேயன்)

ஒப்பியன்மொழி நூல்

முதன்மடலம் திராவிடம் - முதற்பாகம் (தமிழ்)

பண்டித புலவ வித்துவ கீழ்கலைத் தேர்ச்சியாளன் ஞா. தேவநேசன் எழுதியது. 1940.

(மொழிநூல்,பண்டைத்தமிழகம், தமிழ்த்தோற்றம், உலக முதன்மொழிக் கொள்கை என நான்கு பெரும் பிரிவுகளையும் பல்வேறு உட்பிரிவுகளையும் உடைய இந்நூல் 378 பக்கங்களைக் கொண்டது. மருத்துவ அறிஞர் டாக்ற்றர் NB. ஸ்ரீநிவாச மல்லையா அவர்களுக்குப் படையலாக்கப்பட்டது. பேரா. S. ஆறுமுக முதலியார் (M.A; L.T.) க்கு உதவியுரைக்கிறார். “என் கட்டுரைகளைக் குறைகூறி என்முடிவுகள் முன்னிலும் வலிபெறுமாறு செய்த பல