பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

ஸ்ரீநிலையம் அச்சுக் கூடம் திருச்சி.

விலை அணா 2.

(இசைப் பாடல்கள் 35 கொண்டது. இறுதி ஒரு பாட்டும் "திருச்சி மதுரம் டாக்டர் குருமருந்துகளின் குணம்" என்பது பற்றியது. ஒவ்வொருபாட்டு முகப்பிலும் 'இன்ன மெட்டு என்னும் குறிப்புள்ளது. பல்லவி, அனுபல்லவி, சரணம், தொகையரா என்னும் பகுப்புகளும் உண்டு. நூல் பக்கம் 33.)

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

திருச்சிப் புத்தூர்ப் பிஷப் ஹீபர் உயர்தரப் பாடசாலைத் தமிழாசிரியன் பண்டித புலவவித்துவான், கீழ் கலைத் தேர்ச்சியாளன் ஞா.தேவநேயன் எழுதியது.

முதற்பதிப்பு : 1937. சிங்காரம் அச்சுக் கூடம், திருச்சி.

(புத்தூர், திருச்சி. 12-12-1936; ஞா. தே என்பவை முகவுரை இறுதியவை. முகவுரை ஒருபக்கம். "இந்நூற்றிருத்தம் பற்றி அறிஞர்தம் கருத்துக்களைத் தெரிவிப்பின் அவை நன்றியறி வுடன் அடுத்த பதிப்பிற்றழுவப்படும்" என்கிறார். தலைப்புகள் குறியீடுகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் உள. எ-டு : உள்ளடக்கம் - Contents, முகவுரை - Preface.

எழுத்தியல், சொல்லியல், சொற்றொடரியல், அணியில், வியாசவியல் என ஐந்து இயல்களும் அனுபந்தமும் கொண்ட இந்நூல் 84 பக்கங்களையுடையது. இது மாணவர்க்கென வெளியிட்ட நூல்.'A Guide to Tamil Composition for Schools & Col- leges' எனும் தலைப்புப் பொறிப்பே இதனைத் தெளிவுறுத்தும். ஆங்கிலச் சொன் மொழிபெயர்ப்பு என்னும் இணைப்பு (அனுபந்தம்) Appendix முப்பக்கங்கள் உள்ளது. அதற்கும் அவர்தம் வளர்நிலைச் சொல்லாக்கத்திற்கும் ஒப்பிட்டுக்காண “அவரா? இவர்' என எவரும் வியவாதிரார்).