பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் பொன் மொழிகள்

281

மலடாக்கப் பொதுமை, மலடாக்கம், மலடாக்கமும், மதமும் நோய்க்கேற்ற மருந்து என்பனவற்றால் குடும்பக் கட்டுப்பாட்டில் பாவாணர் கொண்டிருந்த அளவிலா அழுத்தம் புலப்படும்.

பிறப் பொருமை:

குலப்பிரிவு ஒழிப்பு, குலவுயர்வு தாழ்வு, குலவெறி கொள்ளாமை, குலவேற்றுமையால் உயர்திணைப் பண்பு குன்றல், குலவொழிப்பு அரசின் கடன், தாழ்த்தப் பட்ட மாணவர் விடுதி, தோட்டியர்பணி, பள்ளிப் பதிவேடு என்பவை குலவேற்றுமை ஒழித்துப் பிறப்பொருமை நிலைநாட்டப் பாவாணர் கூறும் திட்டங்கள்.

அரசியல்:

பாவாணர் அரசியல் தேர்ச்சியை, ஆட்சி ஒப்புமை, இரு கட்சியரசு, இருமொழிக் கொள்கை, இலங்கைத் தூதர், உலகுக்கு ஓராட்சி, உறுமதி மாணவரைப் போற்றுதல், குடியிருப்புரிமை, குழந்தை கைப் படைக்கலம், கூட்டாட்சி, கூட்டுடைமை, கைத் தொழிற் பயிற்சி, கைந்நூலாடை, சம்பளத்திட்டம், சூதாட்டொழிப்பு தந்தையும் அரசும், தமிழகக் கட்சிகளெல்லாம் தமிழ்க் கட்சியாதல், திராவிட முக்கட்சியும் ஒன்றாதல், தொழிலாளர் ஒன்றியம், நாட்டுப் பணி அமர்த்தம், நினைவுச் சின்னம், பரிசுச்சீட்டு நிறுத்தம்,புதுப்புனைவாளரைப் போற்றுதல், மது விலக்கு, மரமடர்ந்த காடு, மாணவரும் அரசியற்கட்சியும், மாணவர் வேலை நிறுத்தம், வணிக இடைஞன் வேண்டா, வரிசையறிதல், வேலை நிறுத்தம் என்னும் பெருகிய தலைப்புச் செய்திகளால் அறியலாம்.

தமிழ் - தமிழினம் :

உயர்ந்தவனும் தாழ்ந்தவனும், எழுத்துத் திருத்தம், ஒப்புயர் வற்ற தமிழர், சமற்கிருதச் சொற்கள், தமிழ் நாட்டுப் பிராமணர், தமிழ்வயிற்றை நிரப்புமா, தமிழ் விடுதலை, தமிழர்க்கு இன்மைகள் பல, தமிழரசின் தலையாய கடமை, தமிழன் பிறந்தகம், தமிழில் வழிபாடு, தமிழின் சிறப்பு, தாய்மொழியில் திருமணக் கரணம் செய்தல், திருக்குறள், தூய தமிழன் முயற்சி, தேவ தேவ மொழி,