பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் பொன் மொழிகள்

289

நேர்ந்தபோதும், உறங்கப் புகு முன்னும் இறைவனை ஒரு நிமையம் எண்ணினாலும் இறைவழிபாடு செய்ததாகும். இங்ஙனம் மனநிலையிலேயே இருக்கக்கூடிய மதத்தை எவரும் அழிக்க ம.வி.46

முடியாது.

இறைவன் ஏற்பாட்டைப் பழிப்பவர்

சில துறவியர் வரையிறந்து பெண்ணை வெறுத்துப் பெண்ணின்பத்தைப் பழித்திருப்பர். அது துறவியர்க்கே கூறிய தென்று இல்லறத்தார் பொருட்படுத்தாது விட்டுவிடல் வேண்டும். விலைமகளுறவையும் நெறி திறம்பிய காம நுகர்ச்சியையும் பழிக்கலாமேயன்றி, பெண்ணின்பந் தன்னையே பழித்தல் கூடாது. அங்ஙனம் பழிப்பவர், இறைவன் ஏற்பாட்டையும் தம் பெற்றோர் வாழ்க்கையையும் பழிப்பவரே ஆவர்.

இறைவனுக்கு ஏற்ற வழிபாடு

த.தி.2.

இறைவனுக்கு ஏற்றது எங்கும் என்றும் உருவமின்றி நேரடியாய்ச் செய்யும் தாய்மொழி வழிபாடே.

உண்மையான பகுத்தறிவு

த.ம.193.

(மத நம்பிக்கையாளரும் நம்பிக்கையில்லாரும்) தத்தம் கொள்கையை எதிர்க் கொள்கையார் நம்புமாறு நாட்ட முடியாதிருப்பதால், கருத்துவேறுபாட்டிற்கிடந்த ஒரு சாராரை ஒரு சாரார் பழிக்காதும் பகைக்காதும் இருப்பதே உண்மையான பகுத்தறிவாம்.

உயர்ந்தவனும் தாழ்ந்தவனும்

த.ம.190.

இவ்வுலகில் தமிழனைப் போல் முன்பு உயர்ந்தவனு மில்லை; பின்பு தாழ்ந்தவனும் இல்லை.

உலகுக்கு ஓராட்சி

தமிழர் வ.முக.1.

பன்னாட்டுக் கழகத்திற் (League of nations) போன்ற ஒன்றிய நாட்டினங்களிலும் (UN) பலகுறைகளும் பிரிவினையும் இருத்தலாலும் போரையும் மக்கட் பெருக்கத்தையும் தடுக்கும் வழியின்மையாலும் உலக முழுதும் ஒரே ஆட்சியேற்படல் இன்றியமையாததாம். ம.வி.216.

உறவினர் மணவீட்டில் தங்குதல்

உறவினர் அயலூரில் இருந்து ஒரு மண வீட்டிற்கு வந்திருப்பின், கரணம் முடிந்தபின் எத்துணை விரைந்து திரும்ப