பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

கடவுள் உண்மை இன்மை

கடவுள் உண்மையை எல்லாரும் நம்புமாறு நாட்டற்குப் போதிய சான்றுகள் இல்லையெனின், அதை மறுத்தற்கும் போதிய சான்றுகள் இல்லையென்பதை உணர்தல் வேண்டும்.

கருத்து வேறுபாட்டை மதித்தல்

ம.வி.47.

காணப்பட்ட பொருள்களைப் பற்றியே கருத்து வேறு பாடிருக்கும் போது காணப்படாத கடவுளையும் மறுமையையும் பற்றிக் கருத்துவேறுபாட்டிற்கு மிகுந்த இடமிருப்பதால் கடவுளை நம்புகிறவரும் நம்பாதவரும் ஒருவரை ஒருவர் குறை கூறாதும் வெறுக்காதும் உயர் திணைக்குரிய உடன்பிறப்பன்பு பூண்டு ஒழுகல் வேண்டும். த.ம.192

காதல்

காதல் என்பது ஒருவரை ஒருவர் இன்றியமையாக் கழிபெரு நேயமாய் இருவரிடை நிகழ்வது. அது கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் போலும் நண்பரிடத்தும், பெற்ேேறாரும் பிள்ளையும் போலும் உறவினரிடத்தும், பூதப்பாண்டியனும் அவன் மனைவியும் போலும் கணவன் மனைவியரிடத்தும் அமைவது. அது அரிய பிறவிக்குணம். த.தி.முன்.7.

காதல் மணம்

பெற்றோரும் பிறரும் முடித்துவைக்கும் திருமணத்திலும் மணமக்கள் இருவர்க்கும் காதலுண்டாகலாமெனினும் காதல் மணமென்று சிறப்பித்துச் சொல்லப்பெறுவது ஓர் ஆடவனும் ஒரு பெண்டும் தாமாகவாழ்க்கை ஒப்பந்தஞ் செய்துகொள்வதே. த.தி.8.

காதல் மணமும் சாதல் மணமும்

மண்ணுலகில் விண்ணுலக இன்பந் துய்க்க த் தக்க காதல் மணங்கள் (பிறவிக்குலத் தீமையால்) தடைப்பட்டுச் சாதல் மணங்களாக முடிகின்றன. ம.வி.116.

காமம்

காமம் என்பது கணவன் மனைவியரிடத்தேயே அல்லது ஆண் பெண் என்னும் இருபாலிடையேயே, நிகழக் கூடிய சிறப்புவகை நேயம். கணவன் மனைவியர் இல்லற இன்பந் துய்த்தற்குக் காரணமான நேயம் என்னும் பொருளிலேயே காமம் என்னுஞ் சொல்லை ஆண்டு, இன்பத்துப்பாலைக் காமத்துப்பால் எனக் குறித்தனர் வள்ளுவர்.

த.தி.முன்.7.