பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

திருமணம்

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

ஓர் ஆடவனும் ஒரு பெண்டும் கணவனும் மனைவியுமாக இல்லறம் நடத்த இசைந்து ஒன்று சேர்வதே மணமாம். மணத்தல் கலத்தல் அல்லது கூடுதல். மண வாழ்க்கைக் கென்றே இறைவன் மக்களை ஆணும் பெண்ணுமாய்ப் படைத் திருப்பதாலும், அதனிடத்து மிகுந்த அறப்பொறுப் புள்ளமையாலும், அது ஆயிரங்காலத்துப் பயிர் ஆகையாலும் வாழ்க்கைத் துணைவர் இருவரும் தெய்வத்தின் முன் அல்லது தெய்வத்தின் பேரில் பலரறிய ஆணையிட்டுக் கூடுதலாலும், மணம் தெய்வத் தன்மை பெற்றுத் திருமணம் எனப் பெற்றது. த.தி.முன். 5

தீயோரை நல்வழிப்படுத்தல்

வேலையின்மையாலும் விளைவின்மையாலும் நேர்ந்த உணவின்மையே களவிற்குங் கொள்ளைக்குங் கரணியமாயிருத் தலால், கள்வருக்கு ஒற்றர் வேலையும், கொள்ளைக் காரருக்குப் படைத்துறை வேலையுங் கொடுப்பின் ஓரளவு நிலைமை திருந்தலாம்.

கள்ளக் காசுத் தாளடிப் பாரையும் கள்ளத்தனமாகத் துமுக்கி (Gun) சுழலி (Revolver) முதலியன செய்வாரையும் பொறியாக்கத் தொழிலிற் பயிற்றின் சிறந்த பொறிவினைஞராகவோ புதுப் புனைவாளராகவோ தலையெடுக்கலாம். ம.வி.144.

துறவியரை ஊக்குதல்

மக்கள் தொகை மிக்கு மாநில முழுதும் இடர்ப்படும் இக்காலத்தில் துறவறஞ் சிறந்த தென்று கூறித் துறவியரை ஊக்குதல் வேண்டும் என்றே தோன்றுகின்றது. த.தி.முன்.4.

தூய தமிழன் முயற்சி

ஒவ்வொரு தூய தமிழனும் தன்வீட்டு (த் திருமணக்) கரணத்தை மட்டுமன்றிப் பிறர் வீட்டுக் கரணத்தையும் தமிழிற் செய்விக்க முயற்சி செய்தல் வேண்டும். வடமொழியில் நடக்கும் கரணத்திற்குச் செல்லுதல் கூடாது. த.தி. 57

தென்மதம்

சிவநெறியான் தன்னைச் சிவனியன் என்றும் திருமால் நெறியான் தன்னை மாலியன் என்றுமே குறித்தல் வேண்டும். இருநெறிக்கும் பொதுமை குறிக்க விரும்பின் தென்மதத்தான் அல்லது தமிழ்மதத்தான் என்று குறித்தல் வேண்டும். த.ம.144